கண்டேன் காருண்ணியன்
By Admin - 03 Dec 2022 790 0

கலைந்த நரை தலையும்
சிறு திருநீறும்,
கந்தல் வேஷ்டியும்,
தோளில் அங்கவஸ்திரமும்,
விழித்திரை மறைக்கும்
பெரிய அளவு பழுப்பு
மூக்குக்கண்ணாடியும்,
துணைக்கு துணை யில்லாது,
கையில் இறுகிய,
கை தடியும்,
தேய்ந்த பாதமும்,
காலத்தை வென்ற காலணியும்,
சுருங்கிய கைகளும்.
காய்ந்த உதடுகளும்,
மௌனமாய் வழிபாடும்,
ஒடிந்த திருவோடும்,
தடுக்கி விழ மறந்த
சில்லரைகளும்,
கண்டும் காணாத
கூட்டமும் இங்கே..
நன்றி சொல்லவில்லை,
குறை சொல்ல கண்டேன்,
குறை தீர்ந்ததும்,
நன்றி சொல்ல
மறந்த தையும் கண்டேன்..
நடமாடும் சிலை போல்,
சிலரை கண்டேன் - எனக்கு
சில்லரை போட மறக்க கண்டேன்..
அருளோன் எவன் என்று ?
அறிய கண்டேன்..
இறைவா...
தோள் தட்டி - அய்யா
என்றதும் - கண்டேன்
காருண்ணியன் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
14 Sep 2021
எதிர்பாராததை எதிர்பாருங்கள்...
எதிர்பார்ப்பு - உண்மையிலே, எதிர்பார்த்தா என்னவாகும் ?எதிர்பார்த்தது நடந்தால் சந்தோஷம். நடக்கலைனா அது நமக்கு வருத்தம். அதன்தொடர்ச்சியாக வன்மம், துக்கம்...
05 Dec 2020
இறைவா
ஆயிரம் விழி கொண்ட இறைவா,உன்னொரு, விழியால் என்னை பாராயோ, உன் மொழியில் அழைத்தால் வருவாயோ,ஊமையாய் நின்றால் என் செய்வாயோஆதி...
11 May 2024
மலர்களே மலர்களே...
மலர்களே மலர்களேஅழுகை வேண்டாம்...வாடினால் வாடினால்உதிர வேண்டாம்..காலங்கள் கூடிவருமே,ஒதுங்க வேண்டாம் - உன்சிரிப்பிலே துளிர் விடுவாய்கலங்க வேண்டாம்....வர...