My Dear பொம்மை விளையாட்டின் ஆரம்பம்
By Admin - 07 Jul 2021 962 0

My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்
மீனாவின் சத்தத்தை கேட்டு, கிச்சன் வந்ததும் மீனா அங்கே மயங்கி இருக்க, அருகில் இருந்த டம்பளரில் இருந்து தண்ணீர் எடுத்து, கார்த்திக் அவள் மீது ஊத்தியதும் சட்டென்று விழித்து.. கார்த்திக், கார்த்திக் அங்க, அங்க..என்று பெரு மூச்சு விட்டுக்கொண்டே, Diana வும், தேஜூவும் விளையாடிகிட்டு இருக்காங்க.. நான் பார்த்தேன்..பார்த்தேன்.. ஜன்னல் வழியே கார்த்திக், எட்டி பார்க்க அங்கே யாரும் இல்லை..இங்க யாருமே இல்ல, நீதானா பாப்பாவை பக்கத்துல வீட்டுல இருக்க சொன்ன, diana எப்படி இங்க வரமுடியும்..பேசி கொண்டே திரும்பி பார்க்க அங்கே மீனாவும் இல்லை... ஹே, மீனா மீனா, எங்க இருக்க..அட, சே..என்ன நடக்குதுனே புரியலையே... மீனா, எங்க இருக்க என்று கத்தி கொண்டே, ஒரு வித பயத்தோடு ஒவ்வொரு அறை கதவை திறக்க, அங்கே ஒன்றும் இல்லை... வெறும் அமைதி.. என்ன செய்வதென்று அறியாது, உடனே வேகமாக ஹால் க்கு ஓடி வந்து, தனது செல் போன் எடுத்து, அவசரமாக, மிக பதற்றத்தோடு தன் நண்பன், ஹரிஷுக்கு போன் செய்து, நடந்த எல்லாத்தையும் சொல்லி, உடனே போலீஸ், இல்ல இல்ல எதுனா சாமியாரை கூட்டிகிட்டு உடனே வா..இங்க, மீனா, தேஜு ரெண்டு பேறும் காணூம்..சீக்கிரமா வாடா...நான் வேற மாட்டிகிட்டு இருக்கேன்..டேய், லைன்ல இருக்கியா..சீக்கிரமா வாடா..இங்க என்ன நடக்குதுனே தெரில. பேச பேச, கால் துண்டிக்கப்பட்டது..
சிறுது நேரத்தில், வீட்டின் காலிங் பெல் அடித்தது, டிங் டாங், டிங் டாங்,..கார்த்திக் வேகமாக ஓடி சென்று, கதவை திறந்து..அங்கே மீனாவோட appa..அங்கிள் நீங்க., வாங்க வாங்க..... இங்க என்ன நடக்குதுனே தெரில அங்கிள்..ரொம்ப நேரமா பெரிய பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்கேன்.. இது பேயா, பிசாசா..ஒண்ணுமே தெரில...என்னால வீட்டை விட்டு வெளில வர முடில, மீனா, தேஜு என்னாச்சு கூட தெரில.. சீக்கிரமா ஹெல்ப் பண்ணுங்க அங்கிள்..நான் என் friend ஹரிஷ் கூட போன் பண்ணி ரொம்ப நேரமாச்சு, அவன்தான் நினச்சேன் என்று சொல்லி கொண்டே, கதவை கார்த்திக் திறக்க, மறுபடியும் பெல் சத்தம் கேட்டு கொண்டு இருக்கிறது, அங்கிள் எதுக்கு பெல் அடிச்சு கிட்டே இருக்கீங்க, நான் தான் கதவை திறந்துட்டேனே.. மறுபடியம் டிங் டாங், டிங் டாங்..அங்கிள் உங்களக்கு என்ன பைத்தியமா நான் உங்க கிட்ட தான் சொல்றேன்..உள்ள வாங்க, முதல பெல் அடிக்கறத நிறுத்துங்க.. சட்டென்று, அங்கே அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி, சார் வாங்க..எப்படி இருக்கீங்க., எப்போ வந்தீங்க என்று மீனாவின் அப்பாவை நலம் விசாரத்தி கொண்டு இருக்க, யோவ், செக்யூரிட்டி அதெல்லாம் அப்பறம் இருக்கட்டும், முதல உள்ள வாங்க அங்கிள் என்று கார்த்திக் கத்தி கொண்டே இருக்க.. அங்கிள், பொறுமையாக..என்ன செக்யூரிட்டி எப்படி இருக்கீங்க..நல்லா இருக்கேன் சார்.. எங்க ? மாப்பிள்ளையும், மீனாவும் காணூம், குழந்தையை கூட்டிட்டு எங்க போனாங்க, எதுனா தெரியுமா.. இல்ல சார், அவங்க சாயங்காலமே வெளில போனாங்க, வர லேட்டா ஆகும் சொன்னாங்க.. வேற ஏதும் தெரில...போன் அடிச்சு பாருங்க..ஆஆ மறந்துட்டேன்..
கார்த்திக் போன் ரிங் டோன், கேட்க அங்கிள், நான் தான் உங்க பக்கத்துல நிக்கறேன்.. நான் பேசறது கேக்குதா இல்லையா..யோவ், செக்யூரிட்டி நீயா ஆச்சு சொல்லுய்யா..டேய், யாரவது சொல்லுங்கடா..சில நொடிகளில், மீனாவின் அப்பா, சேரிங்க நான் கிளம்பறேன். ரெண்டு பேறும் போன் எடுக்கல..ஒரு வேலையா வெளில போறேன்.. வந்துறேன்..அங்கிள், நான் இங்க தான் இருக்கேன்..பேசறது கேக்குதா..போகாதீங்க அங்கிள் ப்ளீஸ்...அங்கிள்...அங்கிள்.....
லைட் மெதுவாக மினு மினுக்க ஆரம்பித்தது, அங்கே அங்கே சில சாமான்கள் மெதுவாக சிதற ஆரம்பித்தது..தீடிர் என்று, மிகவும் அமைதியான சூழ்நிலை, குண்டு ஊசியின் சத்தம் கூட, பயத்தை ஏற்படுத்தும், கார்த்திக்கின் வேர்வை துளிகளும், மூச்சு விடும் சத்தமும் அவனுக்கே ஒரு பயத்தை ஏற்படுத்தியது.. டப் டப் என்று சத்தம்.. சில இடங்களில் பல்பு வெடிக்கும் சத்தம்..கரண்ட் முழுதும் சுட் ஆகிவிட்டது...
அப்போதான், கார்த்திக் மிக பெரிய சிக்கலில் மாட்டி இருப்பது இன்னும் தெளிவாக தெரிந்தது..பயம், கோவம் ரெண்டு கலந்து வீடே அதிரும் போல கத்தி கொண்டே, டேய் யாருடா நீங்க எல்லாம்..என்ன மட்டும் ஏன்டா.. நான் எப்படா வெளில போனே, எங்கடா என் பொண்டாட்டியும், பொன்னும்...ஒவ்வொரு இடமாக, ஒரு வித பயத்தோடு தேடி கொண்டே போக, சட்டென்று ஆங்கில படத்தில் வருவது போல, மொபைல் போன் கேமரா ஓபன் செய்து எல்லா இடமும் மெதுவாக திருப்ப, அங்கே, ஒரு நிமிடம் மரணத்தின் வாசலுக்கு சென்றது போல, கார்த்திக் ஆஆஆஆ ஆஆஆஆ என்று அடி வயிற்றில் இருந்து கத்தி கொண்டே, பெரு மூச்சு மட்டும் வந்தது, அஹாஹஹா அஹ்ஹ்ஹா, அஹ்ஹ்ஹா...வெறும் மூச்சு காத்து மட்டும்..மொபைல் போன் தூக்கி எறியப்பட்டது பயத்தில்.. அடுத்த நொடி...
(தொடரும்)
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
02 Sep 2021
shhhhhh.... i am busy
Busy - the most hated word. All are telling me to be busy. So I was busy searching for the meaning of what is busy ? whom to use and where to use ? ev...
09 Jun 2025
ஏக்கம்
பல வண்டிகள் மாறி வந்து நின்ற அப்பாவை காணாதக் கூட்டம், ஏனோ சற்றும் முன் காரில் வந்த உறவை ஏன் கொண்டாடுகிறது,என்று ஏக்கத்தோடு பார்த்...
19 Apr 2023
தனிமை - ஒரு ஹைக்கூ...
அம்மா சுவையான சாப்பாடுபாத்திரத்தின் சத்தம் பானையின் முனகல் விளக்கு அணைந்ததுகோடை வெயில் உப்பு கரித்ததுஅடுக்குமாடி இருக்க உள்ளங்காலு...