My Dear பொம்மை
By Admin - 05 Jul 2021 567 0
ஒரு அழகான வீடு... அதில் கார்த்திக் அப்பா, மீனா அம்மா, மூன்று வயது மகள் தேஜாஸ்ரீ..இங்கே சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை.. தேஜாவால் அந்த வீடே நிரம்பியிருந்தது. அவளின் சிரிப்பு, வேடிக்கை, மழலை, குறும்புத்தனம்.. அனைத்தும், அவள் அவ்வப்போது செய்யும் சின்ன சின்ன குறும்புகளை, photo ,video எடுப்பது கார்த்திக்கின் வழக்கம்.. அது ஒரு பொக்கிஷம். தேஜாவிற்கு விளையாட ஏகப்பட்ட பொம்மைகள் இருந்தாலும், அவளின் பார்வை "Diana " என்ற பொம்மையின் மேல் இருந்தது.. காரணம் , இவள் மூன்று வயது குழந்தை என்பதால் அந்த பொம்மையின் தோற்றம் ஒரு குழந்தை போல் அவளுக்கு தோன்றியது, அதுவும் பெண் பொம்மை என்பதால், diana அக்கா என்றே தன் மழலையில் அந்த கொஞ்ச மறந்ததில்லை.. தூங்கும்போதும், சாப்பிட்டபோதும், வெளியே விளையாடும் நேரம், மொட்டை மாடியில் விளையாடும் நேரம், எப்பொழுதும், அந்த பொம்மையை கட்டி அணைக்க மறந்ததில்லை... அழகிய பிரவுன் ஹேர், ஐந்து வயது போல் தோற்றம் அளிக்கும் குழந்தை முகம், கழுத்தில் scarf , சின்னதாக ஓவர் கோட், அதன் மேல் ஒரு சட்டை, நீல கவுன், சாக்ஸ், அழகான cut shoe .. அதை பார்க்கும் பொழுது, நொடி பொழுதில் ஒரு நிஜ குழந்தை போலவே தோன்றும்.. ஏனோ, தேஜாவிற்கு அதன் மீது மயக்கம்..
ஒரு நாள், மீனா இரவு டிபன் தயார் செய்வதில், மும்மரமாக இருக்க, உள் அறையில் கார்திக்க்கும், தேஜாவும் விளையாடி கொண்டி இருந்தனர், அப்பா, தேஜாவிடம் புது விளையாட்டு விளையாட போறோம், என்று சொல்லிக்கொண்டே, diana கையில் எடுத்து மேலயும், கீழையும் தூக்கி போட்டு, Jump , Catch ..ஹே....சூப்பர்..அப்படிதான்..என்று சொல்லிக்கொண்டே விளையாட. ஒவ்வொரு முறையும் diana மேலயும், கீழுமாக போய்ட்டு, போய்ட்டு வந்து கொண்டு இருக்க.. சற்றும், எதிர்பாராத நொடியில், தீடிரென்று, diana இரண்டு கைகளும் கார்த்திக்கின் கழுத்தை நெருக்க, கையில் இருந்த மத்த பொம்மைகள் தானாக சிதறடித்து அங்க இருந்த சுவற்றில் ஒட்டி கொண்டது, கார்த்திக், diana கைகளை எடுக்க முயற்சித்து கொண்டே, ஆஆஆஆஆஆ... விடுறி, விடுறி என்று கத்த .. இதை பார்த்த தேஜாவோ, இது அப்பாவின் புது fighting game என்று நினைத்து, கை தட்டி சிரித்து கொண்டுஇருந்தால்.. அவள் தட்டும் ஒவ்வொரு கைக்கும், அப்பாவின் கழுத்து இறுகி கொண்டே போனது, அதை diana வும் ரசித்து கொண்டுருந்தாள்...
சமையல் அறையில் இருந்து, மீனாவின் குரல்..அப்பாவும், பொன்னும் கொஞ்ச நேரம் கத்தாம விளையாடுங்க.. இந்த கத்து கத்தறீங்க..
இங்கே, தேஜா சிரிக்க, கார்த்திக் மரண வலியில் diana கையை கழுத்தில் இருந்த எடுக்க முயற்சித்தபோது, சட்டென்று எதிர்பாராத விதமாக diana கழுத்து திரும்பி, தேஜா வை பார்த்த கொண்டே தாக்க திரும்பியவுடன்..
கார்த்திக், மீனா என்று கத்தி கொண்டே...சமையல் அறையிலுருந்து மீனா பதறி கொண்டே கதவை திறக்க... அங்கே தேஜா அழுது கொண்டு இருந்தால், கார்த்திக் தூக்கி வாரி போட்டுகொண்டு படுக்கையில் இருந்து எந்திரிக்க, முகம் முழுதும் வேர்வை துளிகள், போர்வை முழுதும் நினைந்து யிருந்தது..மீனா என்னாச்சு, ஏன் கத்துனீங்க, தேஜா வேற அழறா என்னாச்சு.. என்று சொல்ல சொல்ல, எதுவும் கேட்காமல், நேராக அலமாரியில் diana பொம்மையை தேடி கொண்டு இருக்க, கடைசியில் கையில் தென்பட்ட வுடன், இது ஏன் இங்க இருக்கு, மத்த பொம்மையல்லாம் சாமி போட்டோக்கு பக்கத்துல இருக்கு.. அதுவா, தெரில..இந்த பொம்மை மட்டும் அங்க வெச்ச கீழ விழுந்து கிட்டே இருக்கு..அதன், இங்க வெச்சேன்.. என்னாச்சு எப்போ..
நேராக, டீ-ஷர்ட் போட்டு கொண்டு, diana வை, தெரு அல்ல, 5km தொலைவில் இருக்கும் ஒரு குப்பையில் போட்டு விட்டு, திரும்பி பார்க்காமல் வண்டியை வேகமாக எடுத்து கார்த்திக் கிளம்பியவுடன்,
Diana : கார்த்திக் see you soon in home
அது கார்த்திக் காதுகளுக்கு கேட்க வில்லை, ஆனால் மனதுக்கு மட்டும்.
ஆட்டிப்படைப்பது என்று முடி எடுத்து விட்டால், diana தேவையில்லை..அதன், கட்டுப்பாட்டில் இன்னும் பல அங்கே காத்துகொண்டு இருந்தது..
(தொடரும்...)
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
28 May 2021
மாற வைக்கும் மாயை...
போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து,உண்ணும் உணவு,உடுத்தும் உடை,காதல்,அன்பு,காமம்,பெருமை,புகழ்,அனைத்திற்க்கும்போதும் என்ற நிலை உண்டு,ஏனோ விதிவ...
23 Sep 2023
புண்ணியம்
கோவிலுக்கு செல்வதும்,தர்மம் செய்வதும்,சுயநலமே...கடந்த காலத்தை மறக்கநிகழ் காலத்தை சரி செய்யபுண்ணியம்...கோவில் படிக்கட்டும் கல்லே,கோவில் சிலையும் கல்லே,...
18 Mar 2024
வெள்ளையும், கருப்பும்...
எப்பொழுது, வெள்ளை அடித்தாலும்,தன் முகத்தில் - மீண்டும் கரி பூசிக்கொள்கிறதுவீட்டின் சமையல் அறை..வெள்ளைக்கும், கருப்புக்கும் - தீராதகாதல்...