ஒரு குப்பை, ஒரு பொக்கிஷம்

By Admin - 04 Jul 2021 966 0

இரவு பத்து மணி..

ஏங்க, நாளைக்கு காலைல ஆறு மணிக்கு எந்திரிச்சு சீக்கிரமா கல்யாணத்துக்கு கிளம்பனும்.. தூங்கிறக்கூடாது..  எங்க தூங்கறது கனகு, வண்டி சத்தம் கேட்டுகிட்டே இருக்கே.. சின்னவனை  மட்டும் கூட்டிகிட்டு போலாம், பெரியவன் இருந்தா கொஞ்ச நேரம் நம்ம பாப்பாவை பாத்துப்பான்..ஹ்ம்ம்.. அப்பறம், சாப்பாட்டுக்கு....போதும் போதும்..தூங்கு..காலைல பேசிக்கலாம்..
பேசிக்கிட்டே இருக்காத..

சரியாக நேரம் காலை ஆறுமணி..

அப்பாவும், அம்மாவும் வேகமாக எந்திரித்து, பல் விலக்கி, கழிவறை சென்று, தனி தனியே குளித்து விட்டு... டேய், சின்ன தம்பி எந்திரிடா.. கல்யாணத்துக்கு நேரமாச்சு, இன்னும் தூங்கிட்டு இருக்க.. இன்னிக்கு சாப்பிட தட்ட தூக்கிட்டு வரக்கூடாது..எனக்கு லீவு.. ஒழுங்கா எந்திரிச்சு கிளம்புடா.. நானும் அப்பாவும், போயிட்டு டிபன் சாப்பிட்டுட்டு, அப்பறம் மதியம் சாப்பாட்டை முடிச்சுட்டு அண்ணனுக்கு, பாப்பாகும் பார்சல் கட்டி தான் வருவோம்..சீக்கிரமா கிளம்பு, கூட்டம் ஜாஸ்தி ஆகிபோச்சுனா, சோத்துக்கு சிங்கித்தான் அடிக்கணும், தெரியும்ல..சீக்கிரம்.. என்ற சொல்லி முடிப்பதற்குள்..ஏம்மா, காலைல.. நான் வரேன்.. நீங்க முன்னாடி போங்க.. நைட் பூரா வண்டி சத்தம்..தூங்கவே முடில.. அப்பறம், அடேய், ராஜாக்கண்ணு பாப்பாவை நீ பாத்துக்கோ, நான் சீக்கிரமா வரேன்.. சின்னவனை மட்டும் அணுப்புச்சு வெய் சீக்கிரமா... ஹ்ம்ம்ம், சரி , சரி சொன்னதே சொல்லாத..தூங்க விடு.. சரி டா, நாங்க கிளம்பறோம்.ஹ்ம்ம்ம் 

அடுத்த இரண்டு வினாடிகளில்..

கனகு, கனகு, எங்க போனா..சுத்தி சுத்தி பாக்கறேன் ஆளையே காணோம்.. டேய் தம்பி அம்மா எங்கடா.. இப்போதான் கல்யாணத்துக்கு கிளம்பி போனாங்க. ஓ! அப்படியா...நான் வரேன் சொன்னேன், அதுக்குள்ள போய்ட்டாளா.. நீ ஏன்டா, இந்த கொசு கடில படுத்து கிடக்குற.. அந்த பக்கமா போய் படு...வண்டி கிண்டி வர போறான்...ஆமா ! நீ வரலையா..
ஹ்ம்ம்ம்..வரேன் வரேன்.. நீ போ..பாப்பா பத்திரம் அட...தூங்கிடாத..

சரியாக காலை 6:30 மணி இருக்கும்.. மண்டபத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கூட்டம்.. ஏங்க, இவ்வளோ கூட்டமா இருக்கே... இருந்தா என்ன.. சீக்கிரமா வா.. 

கனகு, கனகு, நில்லுடி..கத்திகிட்டே வரேன்..கேக்கலையா..உன் புள்ளத்தான் சொன்னான் போயாச்சுன்னு.. நான் தான் வரேன் சொன்னேன்ல, நேரம் ஆச்சு அக்கா, அதான் வந்துட்டோம்.. சரி, சரி ரெண்டு  பேரும் கொஞ்சம் நேரம் அமைதியா வாங்க..

மண்டபத்தில், வரவேற்ப்பு அறையில், எல்லாரும் செல்ல.. இவர்கள் மட்டும், அக்கா உள்ள போலாமா..உள்ளேயா..இருடி.. உள்ள போன, சோறு இல்ல, தண்ணி கூட கிடைக்காது..கொஞ்ச நேரம், காத்தாட இங்கே இருப்போம்.. எப்போ போகணுமோ அப்போ போலாம்..முதல டி, காபிக்கு வழிய பாரு.. அக்கா டிபன் சாப்பிட்டு காபி குடிப்போம்..அதுவும் சரிதான்.. இங்க வா கொஞ்ச நேரம் இப்படி உக்காருவோம்..

உள்ளே இருந்து, ஒரு குரல்.. ரெண்டாவது பந்தி முடிய போகுது.. சாப்படாதவங்க எல்லாரும், சீக்கிரமா சாப்பிட வாங்க, கொஞ்ச நேரத்துல மாப்பிளை அழைப்பு ஆரம்பிச்சுரும்.. அக்கா ! கேட்டுச்சா... கேட்டுச்சு, கேட்டுச்சு..அதனால தான் இங்க ஜன்னல் ஓரமா வந்து உக்கார சொன்னேன்.. ஆமா, உங்க வீட்டுக்காரு எங்க.. தெரில..இங்க தான் இருந்தாரு... காணுமே..

ஏய்! கனகு, இந்த பக்கம் வாடி, அங்க உங்காந்த சத்தம் தான் கேட்க்கும், சோறு கிடைக்காது.. அக்கா, கேட்டுச்சா...அவரு இடம் பாத்து வெச்சுயிருக்காரு போலாமா..ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் வா....

வாங்க, வாங்க இங்க உக்காருங்க... யாருக்காவது, எதுனா இல்லனா கொஞ்சம் ஷேர் பண்ணி சாப்பிடுக்கிலாம்...அப்பறம், கடைசியா புள்ளைங்களுக்கு கட்டிக்கலாம்.. முதல, எல்லா இலையும் பிரிங்க, ஏங்க ஏங்க, அந்த நாய தொரதுங்க..எப்ப பாரு..திங்கற அப்போ வந்துரும்.. ச்சுச்சு, போ போ...போறியா இல்ல கல் எடுக்கவா.. சீக்கிரம், அடுத்த பந்தி முடியறதுக்குள்ள, எல்லாத்தையும் கட்டிப்போம்.. 

கனகு, உன் இலைல என்ன இருக்கு..எனக்கா ! அரை இட்லி, கால் தோசை, ஒரு வாய் மைசூர் பாகு.. வெறும் சட்டினியா நக்கி இருக்கான் போல, இப்புடி வழுச்சியிருக்கு இலைல...ஹாஹா..உனக்கு அக்கா, எனக்கு வந்து.. சட்னி, சாம்பார் ரெண்டு கலந்து இருக்கு, அப்பறம் இது என்ன தெரியலடி, எல்லா கலந்து கிடக்கு.. உருப்படியா திங்கறாங்களா..அவங்க ஆசைக்கு வாங்கி கிட்டு, திங்காம தூக்கி போடற குப்பை தான் நமக்கு சாப்பாடு.. சீக்கிரமா கட்டுங்க..நாய் வேற வந்து கிட்டே இருக்கு.. ஆமா, நீங்க என்ன செய்றீங்க, இல்ல கனகு, நேத்தும் சாப்பிடலையா, பசிக்குது.. ஆனா இந்த இலைல வெறும் மிளகா, கருவேப்பில்லை, கொஞ்சம் சாம்பார் இருந்துச்சு, அதான், இலையோட குடிச்சுட்டேன், பசிக்குது கனகு. வயிறு ஒன்னு இருந்துச்சுன்னா, தின்னு தான ஆகணும்.. இந்த மான கிட்ட வயித்துக்கு, மானம், ரோஷம் தெரியாது.. ஏங்க, உங்க கண்ணுல, மூக்குல முழுசா சட்டினி ஒட்டி இருக்கு, பாருங்க ஈ வேற அதுல மொய்க்குது.. இருங்க நான் தொடைக்கிறேன்.. எத்தனையோ நாள், வயித்துல துணிய போட்டு தூங்கிற்கோம்.. கவலைப்படாதீங்க, ஆடி மாசம் முடிஞ்சிருச்சு, இனிமே நிறையா விசேஷம் இருக்கு, அந்த கடவுள் இருக்கான்..நம்ம சாப்பாட்டு பிரச்சனை இருக்காது.. நீ சொல்லறது கேட்கவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு..

இரு இரு, இந்த இலையை தொடைக்கிறேன், சீக்கிரம் கட்டு.. இந்த நாய..போ போ.... சாப்பாடு, இன்னும் இரண்டு மணி நேரத்துல ஆரம்பிச்சுரும்.. அதுக்குள்ள, வீட்டுக்கு போயிட்டு சீக்கிரமா வரணும்... இல்ல பக்கத்து தெருல இருக்கறவங்க, நாய் கூட்டம் எல்லாம் வரும்.. 

சீக்கிரம் வா போலாம்...

தங்க இடம் இல்லாமல், பாலத்திற்கு அடியில் கிடைக்கும் இடத்தில் தங்கி, கிடைத்தை உண்ணும் ஜனம் இன்னும் இருக்கிறது... 

சிலது நமக்கு குப்பை, அவர்களுக்கு அது பொக்கிஷம்..

Add Your Comments

Say Something

 

Comments

No comments.