நிலையில்லா வாழ்விலே
By Admin - 31 Aug 2022 926 0

நிலை யில்லா உலகிலே
நிலை தேடி அலையும்
நிலை இன்றி
போகும் மாயம்
நிலை
இதுவே
அதுவே,
அறியாது,
எது
நிலை என்று
தெரியாது,
எதற்காக
ஒரு நிலை
வேண்டும்
அறியாது..
யாரோ சொல்ல
யாரோ கேட்க
ஏன் என்று
மறந்து,
கண்களை மூடி,
கொண்டு
நானும்
அந்த கூட்டத்தில்
ஒருவனாய்..
நிலை தேடி
ஓடுகிறேன்,
அது எது
என்று
இன்றும் என்றும்
தேடுகிறேன்..
முன்னோர்கள் சொல்ல
வாழ்வில் ஒரு நிலை
வேண்டும்…
கோயிலில் போதகர்
சொல்ல - ஞானத்தில்
ஒரு நிலை
வேண்டும்….
சற்றே தடுமாற,
யாரும்
என்றும்
எங்கும்
சொல்ல வில்லை,
எவரும் அதை
சொல்ல வில்லை
என்று யாரும்
நினைக்கவில்லை..
இங்கே எது
ஒரு நிலை ?
ஒருவன் சொல்ல
பல கேட்க,
அந்த ஒருவனும்
ஒருவன் சொல்ல கேட்க..
அவனும் ஒருவனிடம்
நிற்க..
இங்கே எது
நிலை ?
இறைவனும்
கேட்பவனே
நாம் சொல்ல...
வதனமும்
அகவையும்
அன்பும்
காதலும்
உறவும்
மதியும்
அழகும்
வானமும்
மழையும்
காற்றும்
நீரும்
நெருப்புமும்
இயற்கையும்
இறைவனும்
ஏன் ?
நீயும்
நானும்
ஒரு
நிலை யில்லை..
வாழ்கின்ற
இந்த நொடியும்
நிரந்திர மில்லை..
பனை ஓலையில்
உறங்கும் நேரமும்
நிலையில்லை,
ஆதலால் - அழுகையும்
நிலை யில்லை...
எதுவுமே
நிலை யில்லை
வாழ்விலே,
நானும்
ஒரு நிலை யின்றி
ஒரு நிலை வேண்டும்
என்று ஓடுகிறேன்..
இங்கே
எதுவும்
நிலை யில்லா,
வாழ்விலே...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jun 2020
What happened in Terrace?
It's an evening time.. may be around 6 pm. It was heavily raining for more than 3 hours, Water started flowing in the stairs like falls from the ...
04 Aug 2021
ஓடி வா முருகா...
ஆறுமுகனே, அய்யனேஓடி வா செய்யோனே..மஹாசேனா, மகேசன் சேனா,கூட வா கந்தனே...ஓடி வா முகனே..தேடி தேடி, அருள் பெற,கண்டேன் உன்னையே,நீயே - குகனே,என்றும...
16 Jun 2022
பிச்சை
அம்மையும் அப்பனும்யார் கண்டார் - பிச்சை வாழ்விலே பிச்சை யின்றி யார் இருப்பார்...இருப்பவனோ உன்னிடம்நெருங்கி வருவான் இல்லாதவன்,வெளிய...