பிச்சை
By Admin - 16 Jun 2022 1156 0

அம்மையும் அப்பனும்
யார் கண்டார் - பிச்சை
வாழ்விலே பிச்சை யின்றி
யார் இருப்பார்...
இருப்பவனோ
உன்னிடம்
நெருங்கி வருவான்
இல்லாதவன்,
வெளியில்
யார் காண்பர்
என்னை போன்று
தோற்றம் கொண்டு
தான் தெரிவார்..
பெற்றவளும்,
பெற்றுக்கொடுத்தவளும்,
பெற்றடுத்தவளும்,
யார் துணை வருவார்..
போனதும் ஒரு நாள்
அழுகை வற்றி போகும்,
மறதியும்
மாமருந்து ஆகும்,
துணை
எதுவென்றி
தேடி...
இங்கே
பாத்திரம் தான்
அதன் சூத்திரம்
நீயும் அறிவாயோ...
பிச்சை என்னும்
வாழ்விலே - உள்ளே
பிச்சே கேட்பவனும்
வெளியே
என்னை காணாததும்
நீ அறிவாயோ..
அன்னம் தானம்
யாருக்கோ,
இங்கே காய்ந்து
கிடக்கும்
இந்த
பிண்டத்திற்கோ...
ஏன் இந்த
வாழ்வோ - என்றோ
யார் செய்த பாவமோ..
ஒரு வாய் பிண்டம்
இல்லை இங்கே,
தண்ணீரும் தர மனம்
இல்லை இங்கே...
கேள்விகள் கேட்க
மனம் அல்லாது
கல்லாகி
போனாயோ ..
கண் கொண்டும்
கால் கொண்டும்
கை கொண்டும்
வதனம் மெருகும்,
நண்ணு மனமே
இல்லையோ...
வெயிலும்,
மழையும்
எல்லாம் ஒன்றே,
மருந்தும்,
அருந்தும்
அல்லாது...
பிணியும்
சேராது...
இச்சை கொண்டவன்
நானே - மறு ஜென்மம்
ஆசை துறந்தேன்..
இந்த நொடியில்
ஜீவன் சென்றாலும்
ஒரு வாய் பசியாகி
போக அருள்வாயோ...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Mar 2024
எண்ணம்
எண்ணங்கள் யதார்த்தங்கள் அல்ல,எண்ணங்களின் ஊடாக தான் யதார்த்தங்கள்..எண்ணங்கள் யென்று மறைகிறதோ,அங்கே நிம்மதி நிலைக்கிறது !!!- கல்யாணராமன் நாகரா...
07 Jun 2021
பரம ரகசியம்...
யாருக்கும் தெரியாது,தெரியவும் கூடாது - யென்றுநினைக்கும் பொழுதில்,தெரிந்து விடும் - ஒரு அதிசயம்கருவில் - அணுக்கள் உருவம் முதல் - நம்மைஇன்னுயி...
29 Apr 2023
சிறகு ஹைக்கூ...
பூக்கடையில்பன்னீர் பூ நினைவோ,மரணத்தின் வாசம் வழி மறந்தேன்,கிடைத்தது பறவையின் சிறகு.....