தள்ளாடுதே, உன்னாலே...

By Admin - 03 Sep 2022 439 0

கண்ஜாடை பேசினாள்,
காற்றின் மொழிகள்
கேட்குதே..

வதனம் மெருகும்
ஆகுதே - வெட்கங்கள்
நூறானதே...

பார்க்க பார்க்க
பிடிக்குதே,
பழகி பார்க்க
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...

என் பெயரும்
மறந்து போனதே,
உன் முகவரி
என்ன தேடுதே,
கண்கள் தினம்
உன்னை பார்க்கவே,
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...

கைகள் பிடிக்க
தோணுதே,
நடையும் பழகி
போனதே,
காலம் மறந்து
போகுதே,
பாஷை மௌனம் 
ஆகுதே,
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...

சிறிய சிறிய 
ஆசைகள்,
சிறுக சிறுக
பெருகுதே,
உன்னை
காணும் நேரத்தில்,
நாணம் மறந்து
போகுதே,
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...

மஞ்சள் வெயில்
தேடினேன் - உன்
நிழலில் தூங்க
ஓடினேன்..
மீண்டும் 
மீண்டும்
சிரிக்கிறேன்,
தனிமை தேடி
போகிறேன்..
ஏங்குதே,
உள்ளூறுதே,
மனம்
தள்ளாடுதே..
உன்னாலே...

Add Your Comments

Say Something

 

Comments

No comments.