வாழ்க்கையில் ஒரு மனிதன் !!!
By Admin - 04 Feb 2020 1143 0

துன்பமே இன்பத்தின் ஆரம்பம்,
இன்பமே துன்பத்தின் ஆரம்பம்,
இன்பமும், துன்பமும் கலந்திருப்பது வாழ்க்கை,
நம் – வாழ்நாளில்
இன்பம் இருக்கும் பொழுது,
துன்பம் வந்தால் தான் – அந்த
இன்பத்தின் அருமை தெரியும்;
துன்பப்பட்டு, இன்பத்தை அனுபவித்தால் தான்,
இன்பத்தின் சுகம் தெரியும் !!!
ஆசையே, பேராசைக்கு அறிகுறி – அந்த
ஆசையே துன்பத்திற்கும் அறிகுறி – அதற்கென்று
ஆசையே படக்கூடாது என்றில்லை – அளவோடு
ஆசைப்பட வேண்டும், அளவிற்கு மீறி ஆசைப்பட்டால் – அது
பேராசையாக உரு வெடுத்து விடும் – பின்னர்
அழிவை தேடி தரும் !!!
வாழ்க்கையில் ஒரு மனிதன் இன்பத்தையே
அனுபவிக்காமல் போகலாம் – அவன்
வாழ்க்கையில் துன்பப்பட்டு கொண்டிருப்பான்,
இன்பத்துக்காக காத்திருக்கமாட்டான் !!!
அவன் – தன் வாழ்க்கையில் இன்பம் கலந்த
துன்பத்தை கொண்டிருப்பான் – ஆனால் முழு
இன்பத்தை பெறமாட்டான் !!!
கடைசியில்,
இன்பம் அவனை தேடி வரும் பொழுது,
அவன் – பிண்டம் கொண்டு, பலர்
அன்னம் கொண்டனரோ !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
24 Oct 2020
உன்னை பார்த்தால் போதும்...
உன்னை,பார்த்தால் போதும்,என் வாழ்வின் துன்பங்கள் தீரும்;அந்த வானத்து நிலவும்,சின்னதாய் தோன்றும்உன் மழலையில் - என்னை மறந்திடும் நேரம்..உன்னை ம...
29 Sep 2022
மோக்ஷம்
வேதங்கள் சாரமும் பக்தியின் ஸூக்தமும்ஞானத்தின் நீளமும் சாஸ்திரமும்உபநிஷமும்கிளை கதைகளாய்,தர்மமும்கர்மமும்பிணைந்துகாட்டியதுஅன்பென்றோ…ஆசை ...
18 Jan 2024
என் கடைசி ஆசை......
நிழலாக மாறிய நான்,நிஜமாக உறங்கும் நேரம்..என்னை,அடைக்க வேண்டாம்,சிறு கண்ணாடி பெட்டிக்குள்..இந்த இறுதி நிமிடத்தில்,என் தலை கோதிக்கொண்டே,என் அம்மா அவள் ம...