Very nice composition
மாய கண்ணன்
By Admin - 07 Sep 2022 944 1

கண்ணன்
தேடிய ராதை,
யமுனை யோரம்
வந்தாள்..
கண்கள் காய்ந்திட,
கால்கள் தேய்ந்திட,
பாவமாகி நின்றாள்..
மாய கண்ணன்
குழல் கேட்டதும்,
தன்னை மறந்து
பறந்தாள்...
மோக கடலில்
மூழ்கி - காதலாகி
போனாள்...
கண்ணனை கண்டதும்,
கண்கள் பேசிட
கைகள் தீண்டிட
தோளில் சாய்ந்து
மௌனமாகி சிரித்தாள்..
வீசும் தென்றலும்,
இவளை உரசிட,
மடந்தை போல
நடந்தாள்..
பாவை ராதை
சாய்ந்ததும்
கருங்குழல்
உரசிட,
கண்ணன்
காதல் என்று
சொன்னான்..
பேதை நெஞ்சம்
கொண்ட ராதை
கண்கள் கலங்கி,
கைகள் கோர்த்து
நதியோரம் நடந்து
போனாள்..
நிலவும், சூரியனும்
வானில் ஒரு சேர
வானம் சிரித்திட,
மழையோடு
இதயம்
கரைந்து
போனாள்..
Add Your Comments
Say Something
Comments
See More Stories
12 Jun 2025
உரையாடல் தீராமல்...
மாலை,நான் வீடு திரும்பும் முன்னே சொல்லாமல் வெகுதூரம் சென்றாள்,அவள் இல்லை...வீடே திருவிழாப் போல் இருந்தது..கையில் அவளுக்குப் பிடித்த பூவுடன்...
07 Oct 2022
பிள்ளையாரும் சக்கரை பொங்கலும்....
பிள்ளையாரும் சக்கரை பொங்கலும்..காலை 6 மணி....அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள்... அங்கே குடி இருக்கும், சில பெண்கள் மட்டும் இருக்கும் whatsapp குர...
16 May 2020
Memories are always Treasure -...
www.amdiya.in - we always like to live our childhood days or atleast look back, so we end up looking at our old photos. But I always wished how I look...