வெள்ளை
By Admin - 11 Sep 2022 829 0

சில நொடிகள்
இமைக்காமல்,
கடிகாரத்தின்
முட்கள்
நகர்வதை
பார்க்கும் பொழுது
காலத்தில் வேகத்தை
கண்டு பயம்
தொற்றி கொண்டது..
அது ஒரு போல்
நகரும் - நம் சூழ்நிலை
சொல்லும் அது
வேகமா
சோகமா..
இப்படி வேதாந்தத்தை
யோசிக்கும் பொழுது,
என்னையும் ஒருவன்
உங்களக்கு
வெள்ளை மனசு
என்றதும்..
என், நுண்ணறிவு
கடிகாரத்தின் முட்களை
மறந்து - வெள்ளை
என்றால் ?
யோசிக்க ஆரம்பித்தது..
நிலவும் வெள்ளை
பூவும் வெள்ளை
மேகமும் வெள்ளை
பணியும் வெள்ளை
நீரும் வெள்ளை
கற்களும் வெள்ளை
பற்களும் வெள்ளை
எலும்பும் வெள்ளை
முத்தும் வெள்ளை
தந்தமும் வெள்ளை
பளிங்கும் வெள்ளை
புகையும் வெள்ளை
தூய்மையும் வெள்ளை
மென்மையும் வெள்ளை
அமைதியும் வெள்ளை
காகிதமும் வெள்ளை
வண்ணமும் வெள்ளை
மெழுகும் வெள்ளை
பறவையும் வெள்ளை
விளங்கும் வெள்ளை
முட்டையும் வெள்ளை
ஒளியும் வெள்ளை
மின்னலும் வெள்ளை
இனிப்பும் வெள்ளை
பாலும் வெள்ளை
பால் ஏடும் வெள்ளை
அரிசியும் வெள்ளை
தேங்காய் யுள்ளும் வெள்ளை
கடல் நுரையும் வெள்ளை
சுண்ணாம்பும் வெள்ளை
ஆடையும் வெள்ளை
பஞ்சும் வெள்ளை
விழி தோலும் வெள்ளை
சிறகும் வெள்ளை
விஷமும் வெள்ளை
பேயும் வெள்ளை
இதில் எவ்வகை
வெள்ளை நானென்று
அறியாது - சில நொடிகள்
லயித்து நின்றேன்..
மறுகணம்,
மறுபடியும்,
கடிகாரத்தின்
முட்கள் மீது
மாறியது..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jun 2020
What happened in Terrace?
It's an evening time.. may be around 6 pm. It was heavily raining for more than 3 hours, Water started flowing in the stairs like falls from the ...
28 Aug 2025
என்னை அறியாமல்...
என்னை அறியாமல் விம்மி அழுகிறேன்,சட்டென்று வெறும் கோபங்கள் எல்லாம்,இன்று ஏனோ மௌனமாய் கடக்கின்றேன்..எதையோ நினைத்து மனதும் உதட்டோரமாய் சிரிக்கிறது...காரண...
11 Jul 2020
அன்பு - Haiku...
வெண்ணை திருடி தின்பது கூட, குறும்புத்தனம் என்று சொல்லவும்,அன்பினால் மட்டுமே முடியும் !!!...