My Dear பொம்மை உருமாற்றம்
By Admin - 10 Jul 2021 1014 0

My Dear பொம்மை - உருமாற்றம்
வேகமாக, தவழந்து கொண்டே சுவர் ஓரம் சென்றவுடன், சில வினாடிகள். திரும்பவும், கீழே விழுந்த செல் போன் எடுத்து, மிக பதற்றத்துடன், உடைந்த சில பாகத்தை மாட்டி கொண்டு, திரும்பவும் மெதுவாக கேமரா ஆன் செய்து, மறுபடியும் மெதுவாக கேமராவை திருப்பி கொண்டே போக, இதற்கு முன் பார்த்தே அதே நிகழ்வு.. காரணம், கார்த்திக் தூக்கி எறியப்பட்டது ஒரு diana , ஆனால் அங்கே சுவற்றில், நூற்றுக்கணக்கான diana ஒட்டி கொண்டு இருந்தது... உடனே, கேமரா off செய்து விட்டு, மெதுவாக வெளியில் தப்பிக்க, தவழந்து கொண்டே மெதுவாக.. அங்கே ஒரு அமைதி.. கார்த்திக்கின் மூச்சு காற்றை தவிர எந்த சத்தும் இல்லை..எதிர்பாராத நொடியிலே, தேஜுவின் doll ஒன்று சட்டென்று பாட ஆரம்பித்தது, You're my Honeybunch Sugarplum ,Pumpy-umpy-umpkin ,You're my Sweetie Pie பயத்தில், கார்த்திக் ஆஆஆஆ ஆஆஆஆ என்று கத்தி கொண்டே, அந்த doll ஒரு உதை விட, தீடிர் என்று ஒரு கை கார்த்திக் வாயை பொத்தி கொண்டே, வேகமாக தரையில் இழுத்து கொண்டே ஒரு ரூமில் இருக்கும் cup -board குள்ளே வீசப்பட்டது.. ஒரு நொடி என்ன வென்றே புரியாமல், தன் வீட்டில் cup -boardகுள் இவ்ளோ பெரிய இடம் இருப்பது இதுவரை தெரியவில்லை.. ஏற்கனவே இருட்டு, இங்கே இன்னும் அதிகம்.. யார் தன்னை இழுத்து உள்ளே போட்டது என்று தெரியவில்லை.. ஆனால், ஒரு 70 வயது ஆணின் கை போல் இருந்தது.. வெளிய என்ன நடக்கிறது, உள்ளே இங்க நான் எப்படி.. மீனா, தேஜு எங்கே.. எதுவும் தெரிய வில்லை..எப்படி, மீனா, தேஜுவையும் காப்பாத்தறது, நான் எப்படி வெளில போறது.. தெரியாமல் cup -board பல முறை முயற்ச்சித்தும் திறக்கவில்லை...
மிக அமைதி, சில வினாடிகள்.. ஆனால், அந்த doll கார்த்திக் உதைத்த வேகத்தில், ஹாலின் ஒரு மூளையில் அதே பாட்டை பாடி கொண்டு இருந்தது ஓயாமல்.. தீடிரென்று, டக் டக், டக் டக், என்று வாச கதவை தட்டும் சத்தம், தேஜுவின் மழலை குரல்...யாரோ, கதவை திறக்கும் சத்தும், அஹஹ்ஹா தேஜு தேஜு, யாரோ கதவை திறக்கறாங்க..கண்டிப்பா தப்பிக்கலாம்...என்று சொல்லிக்கொண்டே cup -board திறக்க முயற்சித்து போது, முடியவில்லை.. வேகமாக, கதவை அடித்து தள்ள, துளியும் அசைவில்லை. சத்தம் மட்டும் கேட்கிறது, அதுவும் கார்த்திக் மட்டும்.. உள்ளே தட்டும் சத்தும், வெளியே கேட்கவில்லை..சட்டென்று, ஒரு குரல், உங்கள மாதிரிதான் நானும் மாட்டிக்கிட்டு இருக்கேன்..கொஞ்ச சத்தம் போடாதீங்க, இது எங்கேயோ கேட்டோ குரல்..என்ன நீங்க தான் உள்ள தூக்கிட்டு வந்தீங்களா..ஹ்ம்ம்ம்.... குழப்பத்தின் உச்சத்திற்கே சென்ற கார்த்திக், நீங்க எப்படி இங்க, யாரு நீங்க, அதுவும் எங்க வீட்டுல..மீனாவும், தேஜா எங்க.. வெளியே குரல் வேற கேக்குது.. முதல் நீங்க யாரு...அந்த நபர், தனது பாக்கெட்டில் இருந்து, matchbox எடுத்து பத்தவெச்சதும், நீங்களா ? என்று அதிர்ந்து போன கார்த்திக்..
அதே சமயம், வெளியே வீட்டின் கதவை, திறந்து உள்ளே வர..அவரக்ளும் அதிர்ந்தே போனார்கள்..காரணம், உள்ளே வந்தது கார்த்திக், மீனா, தேஜா... பின்னாடியே செக்யூரிட்டி, சார், கொஞ்ச நேரம் முன்னாடி தான், மேடம்மோட அப்பா வந்தாரு. வீடு பூட்டி இருக்கு சொல்லிட்டு போய்ட்டாரு.. நைட் வரேன் சொல்ல சொன்னாரு.. சரிங்க அண்ணா என்று சொல்லி, கதவை சாத்தி, தாள் போட்டு விட்டு.. உள்ளே வர வர, மீனா அங்கே இருந்து.. காபி குடிச்சீங்கனா எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன், டம்ளர் தேய்க்க போடுங்கனு.. நான் எங்க காபி குடிச்சேன், அப்போ இது என்ன.. சத்தியமா எனக்கு தெரியாது... இங்க, பாருங்க தரையில தண்ணி..கிச்சன்ல எதுக்கு தண்ணி, இவ்ளோ சிந்திற்கு.. நான் வெளில போறப்போ சொன்னேன், பால்கனி ஜன்னல் சாத்திட்டு வாங்கனு, இங்க பாருங்க திறந்து இருக்கு.. கார்த்திக் ஒன்னும் புரில...ஒரு நிமிஷம் மீனா, நல்லா ஞாபகம் இருக்கு, நான் கண்டிப்பா ஜன்னல் சாத்தினேன், அப்போ கிச்சன்ல காபி டம்ளர் இல்ல, தண்ணியும் இல்ல.. ஓஹோ, அப்படியா.. அப்போ இங்க வாங்க தேஜாவோட doll எடுத்து வெச்சுட்டு வாங்க சொன்னேன், இங்க பாருங்க மூளைல கிடக்குது... ஒரு வேலை செய்யறீங்களா... chair விழுந்துருக்கு, பாத்ரூம்ல - தண்ணி வழிஞ்சு ஓடுது, இங்க பாருங்க, இது என்ன, இந்த ஓட்ட போன் வேற கீழ கிடக்கு.. இதெல்லாம் எப்படி வந்துச்சு.. வீட்டுக்கு யாருன்னு வந்து, எல்லாத்தையும் தள்ளி விட்டு போனாங்களா..
கொஞ்ச நேரம் அமைதியா இரு, நான் எதுக்கு எல்லாத்தையும் இப்படி தள்ள போறேன்.. நம்புடா, எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டு தான் வந்தேன் என்று சொல்லிக்கொண்டே ஒரு ஒரு ரூமாக மீனா சென்று பார்த்து கொண்டுயிருந்தால். அதே நேரத்தில், கார்த்திக் குழப்பத்துடன், திரும்பி பார்க்க, அங்கே தேஜு diana வைத்து விளையாடி கொண்டுயிருந்தால்.. நான் இதை, உள்ள வெச்சுட்டு தான் வந்தேன்.. இது இப்படி இங்க..ஹ்ம்ம்... தேஜு, வா நம்ம ரூம்க்கு போய் விளையாடலாம்..
அதே நொடியில், உள்ளே cup -board -இல் கார்த்திக், அவனருகே உள்ளே இருந்தது வேற யாரும் இல்லை - அது மீனாவின் அப்பா. அங்கிள், நீங்க இப்படி இங்க.. உங்கள நான் தான் வெளில பார்த்தேன்..கொஞ்ச நேரம் பேசாதீங்க..இங்க வேற ஏதோ நடக்குது, எனக்கே ஒன்னும் புரில.. நானும் இங்க மாட்டிக்கிட்டு தான் இருக்கேன்.. அப்போ, மீனா, தேஜு.. வெளில குரல் கேட்டுச்சு..அதற்க்கு மீனாவின் அப்பா தந்தே ஒரே பதில் உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ். இருங்க.. இப்போது, மெதுவாக கார்த்திக் கதவை திறக்க, ஆச்சர்யம் ! சிரமம் இல்லாமல் கதவு திறந்தது. அங்கே கார்திக்க்கும், தேஜாவும் விளையாடி கொண்டு இருந்தார்கள்..
அப்போது, வெளியில் இருந்த கார்த்திக், தேஜாவிடம், புது விளையாட்டு விளையாட போறோம், என்று சொல்லிக்கொண்டே, diana கையில் எடுத்து மேலயும், கீழையும் தூக்கி போட்டு, Jump , Catch ..ஹே....சூப்பர்..அப்படிதான்..என்று சொல்லிக்கொண்டே விளையாட. ஒவ்வொரு முறையும் diana மேலயும், கீழுமாக போய்ட்டு, போய்ட்டு வந்து கொண்டு இருக்க.. சற்றும், எதிர்பாராத நொடியில், தீடிரென்று, diana இரண்டு கைகளும் கார்த்திக்கின் கழுத்தை நெருக்க, கையில் இருந்த மத்த பொம்மைகள் தானாக சிதறடித்து அங்க இருந்த சுவற்றில் ஒட்டி கொண்டது, கார்த்திக், diana கைகளை எடுக்க முயற்சித்து கொண்டே, ஆஆஆஆஆஆ... விடுறி, விடுறி என்று கத்த .. இதை பார்த்த தேஜாவோ, இது அப்பாவின் புது fighting game என்று நினைத்து, கை தட்டி சிரித்து கொண்டுஇருந்தால்.. அவள் தட்டும் ஒவ்வொரு கைக்கும், அப்பாவின் கழுத்து இறுகி கொண்டே போனது, அதை diana வும் ரசித்து கொண்டுருந்தாள்...
இதை, cup -board வழியாக கார்திக்க்கும் பார்த்து கொண்டுயிருந்தான்... வெளியில் இருக்கும், கார்த்திக்கின் கையில் இருக்கும் diana -வும், உள்ளே இருக்கும் கார்திக்க்கை பார்த்து கொண்டே சிரித்து கொண்டுயிருந்தது..
(தொடரும்)
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
கண் திறந்தால் ...
இருண்டு கிடக்கும் வாழ்வில்கண்களை மூடிக்கொண்டு, சுற்றும் பதறுகளே...சற்றே - கண் திறந்தால் அதன் ஒளி தரும் பல வண்ணம்தனிமை யென்பது, ஒடு...
30 Jul 2021
முகம்
தெரிவது ஒருமுகம்,ஒளிந்திருப்பது பல முகம்,எம்முகம் எவ்வரும்,அம்முகம் அவ்வரும்,நேரம் உருமாறும்;எது - நிஜமுகம்,யாரும் அறியோம்;உள்ளம் தெளிவினில்,முகமும் ம...
05 Sep 2025
தலையணை
யாரிடமும் சொல்லாத கதை,மறக்க வேண்டிய இரகசியம்,அனைத்தும், புதைந்து போனதுதலையணையில்......