My Dear பொம்மை இனிதான் ஆரம்பம்

By Admin - 06 Jul 2021 860 0

MY DEAR பொம்மை - தொடக்கம்


My Dear  "பொம்மை"  - இனிதான் ஆரம்பம்   

டிங் டாங், டிங் டாங் என்று காலிங் பெல் கேட்டவுடன், மீனா கதவை திறந்தவுடன், கார்த்திக்கை பார்த்தவுடன் ஒரு நிமிடம் உறைந்து விட்டாள், நீங்க எப்படி வெளில...என்ன உளற, சீக்கிரமா கதவை திற... கார்த்திக், செப்பலை கழட்டும் போது, மீனா, நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கிட்ட காபி கேட்டுட்டு குளிச்சுட்டு வரேன் போனீங்க..எப்போ வெளில போனீங்க, சொல்லாம கொள்ளாம.. நான் காபி கேட்டேனா..ஆமா கார்த்திக்..நீங்க தான்.. கொண்டு வந்தேன், இங்க பாருங்க என்று சொல்லி சமையல் அறையிலிருந்து காபி டம்ளர் கொண்ட வர, கார்த்திக் என்ன சொல்ல என்று புரியாமல், ஒரு பயம் லேசாக தொற்றி கொள்ள ஆரம்பித்தது... அப்பறம் என்னாச்சு, உங்கள தேடுனே, பார்த்தா தேஜா கூட உள்ள விளையாடி கிட்டியிருந்தீங்க, காபி கொடுத்தேன், எதுவும் வேண்டாம் சொல்லி, குளிக்க போய்ட்டிங்க.. இப்போ பார்த்தா வெளிய இருந்து வரீங்க.. விளையாடாத மீனா..

சத்தியமா, நான் உங்கள கேட்கணும், என்ன விளையாட்டுனு.. மெதுவா பேசுங்க, தேஜாவை இப்போதான் தூங்க வெச்சேன்..சரி, இப்போ நான் எங்க இருக்கேன், இங்க என் கூட..அஹ்ஹா...தல சுத்துது..இங்க பாரு மீனா, நான் எந்திரிச்சி உடனே, அந்த diana பொம்மையை எதுத்து கிட்டு நேரா வெளிய போய்ட்டு இப்போ தான் வரேன்.. நான் உன் கிட்ட காபி கேட்கல, குளிக்கவும் போல.. என்று சொல்லி முடிக்க, பாத்ரூமில் இருந்து தண்ணீர் சத்தம்... நீங்க குளிக்க போகாம தான், தண்ணியே மூடாம வந்துயிருப்பீங்க எப்போதும் போல..பக்கெட் வழிஞ்சு போகுது போல, நம்பிக்கை இல்லனா, நீங்களே போய் திறந்து பாருங்க..

கார்த்திக், ஒரு வித பதற்றத்துடன், கதவை நெருங்கும் போது.. இதய துடிப்பும் பல மடங்கு அதிகமாக துடித்து கொண்டிருந்தது.. ஏன் இவ்வளவு தயக்கம் ஏதோ பயந்த மாறி.. முதல கதவை திறங்க, அதுக்குள் சமையல் அறையில் யிருந்து, குக்கர் விசில் சட்டென்று கத்த இருவருக்கும், தூக்கி வாரி போட்டு கொண்டு பயத்தில் கத்தி கொண்டே..சே, குக்கரா. பயந்துட்டேன் மீனா.. என்று சொல்லிக்கொண்டே திரும்பி பார்க்க அங்கே மீனா இல்லை, பயத்தில் மீனா, மீனா என்று தேடும் நேரத்தில் பாத்ரூமிலிருந்து, மீனா குளித்து விட்டு வெளிய வந்தால்... ஒரு நிமிடம், பேய் அறைந்தாற்போல், கார்த்திக் முகம் முழுதும் வியர்வை, கண்கள் விரித்து கொண்டே இரண்டு அடி பின்னே நடந்து கொண்டே சுவற்றில் கை வைத்து, மீனா, நீ எப்படி இங்க ? நீ மீனா வா.

ஹஹ்ஹா..உங்களக்கு என்ன பைத்தியமா.. ஆமா, முதல நீங்க எப்படி உள்ள வந்தீங்க, நீங்க தான, ஏதோ தூக்கத்துல திடிர்னு எந்திரிச்சு, diana வை தூக்கிட்டு போனீங்க, கூப்பட கூப்பட பதிலே சொல்லல, இங்க தேஜா வேற ஒரே அழுகை... சூப்பர், அப்போ நீ தான் மீனா, அப்போ, எனக்கு கதவு திறந்து விட்டு எவ்ளோ நேரம் என்கிட்ட பேசினது ? குக்கர் விசில் அடிச்ச உடனே உன்ன கானும்..குக்கர் விசிலா, நீங்க வெளிய போனப்பவே, சமைச்சு முடிச்சாச்சு...ஐயோ, நம்புடி ஏதோ, இங்க தப்பா இருக்கு, சத்தியமா எனக்கு ஒன்னும் புரியல மீனா.. ஓகே ஓகே, ஆனா கார்த்திக் நீங்க எப்படி உள்ள வந்தீங்க எனக்கு தெரில.. நான் தான், கதவை சாத்திட்டு, தேஜாவை தூங்க வெச்சுட்டு குளிக்க போனேன்.. ஆனா, நீங்க எப்படி. என்று பேசும் பொழுது, டக்கென்று மீனா கை பிடித்துக்கொண்டே, சமையல் அரை சென்றால் அங்கே, காபியும் இல்லை, குக்கரும் இல்லை.. நான் சொன்ன எங்க நம்பறீங்க.. 

மறுபடியும் டிங் டாங், டிங் டாங், கார்த்திக் கதவை திறந்த வுடன், அங்கே மீனா.. இருவரும் ஒரே நேரத்தில், நீங்க.. கார்த்திக் பயம் மட்டும் இல்லை, ஒரு நிமிடம் தலை சுற்றி, பயம், வெறுப்பு ,கோவம் எல்லாம் சேர்ந்து கொண்டு ஆஆஆ என்று கத்தி கொண்டே, கிச்சன் சென்றால் அங்கு யாருமே இல்லை.. வேகமா ஓடி உள்ளே சென்று, தேஜாவை, தொட்டிலில் தூக்க பார்க்கும் பொழுது, அங்கே தேஜாவும் இல்லை... மறுபடியும், பதறி, விழுந்து வாரி ஓடி வந்து , வாசல் கதவை வேகமா திறந்தவுடன், என்னாச்சு உங்களக்கு ஏன் இவ்வளவு டென்ஷன், ஏன் கத்தறீங்க..எனக்கு ஒன்னும் புரில. நடந்ததை, கார்த்திக் சொல்ல சொல்ல, மீனாவுக்கு ஒன்றும் புரியவில்லை, நீங்க எதுனா பார்த்து பயந்துடீங்களா, இல்லடி..இப்போ கூட எனக்கு நீ மீனாவா தெரில..எனக்கு பைத்தியம் புடிக்கது...தேஜா எங்க ?
ஏன் கூடத்தான் மாடிக்கு வந்தா, ரெண்டு பெரும் வாக்கிங் போய்ட்டு, இப்போ பக்கத்து வீட்டுல விளையாடி கிட்டு இருக்கா.. முதல, அவ அங்க இருக்காளா பாரு, உளறாதீங்க! இப்போ தான் விட்டுட்டு, பெல் அடிக்கறேன். இங்க பாரு, மீனா... oh....போதும் கார்த்திக், முதல நான் சொல்றத கேளுங்க.., நீங்க எந்திரிச்சி உடனே காபி வேணுமா கேட்டேன், நீங்க எதுவமே பேசாம diana தூக்கிட்டு வெளியே போனீங்க, நானும் தேஜாவும் மாடிக்கு போனோம்.. இப்போ பார்த்தான் நீங்க உள்ள இருக்கீங்க..

ஐயோ, நான் எப்படி புரியவைக்கிறது, உள்ள உன்ன மாறியே ரெண்டு மீனா இருக்காங்க, அப்பறம் ஒரு தேஜாவும்..ஹஹ்ஹ.. ஒரு நிமிஷம் இருங்க, gas ஸ்மெல் வரல..ஆமா..தள்ளுங்க.. வேகமாக கிச்சனுக்கு சென்று, ஜன்னல் கதவை திறந்தும், மீனா ஆஆஆஆஆஆ என்று கத்த, அங்கே பால்கனியில் diana வும், தேஜாவும் விளையாடி கொண்டு இருந்தார்கள்..

(தொடரும் )

Add Your Comments

Say Something

 

Comments

No comments.