கடவுளை தேடி !!!
By Admin - 04 Feb 2020 1121 0

விழியுண்டு, வழியுண்டு,
காணாத கண் கொண்டு !!!
நின்னை தேடா - எங்கும்,
தேடல் தொடர்ந்திட...
நித்தம் தோன்றும்;
பெயரெல்லாம்
உன்னை அழைத்திட,
சிந்தையில் தோன்றும்;
உருவமெல்லாம்
படைத்திட, எங்கோ தேடி;
இங்கே தஞ்சம் புகுந்திட,
ஆயிரம் விழிகொண்டு
உன்னை காணவில்லை,
சத மானுடர்க்குக்
புலப்படவில்லை..
சிதறிய துகள் கற்கள்;
எங்கோ சிதறிட,
அதினுள் - ஒரு
கலையாய் உருவெடுக்க,
பல புரியாத பரி பாஷைகள்
உனக்காக எழுதிட,
அர்த்தம் ஏதும் அறியா,
தெரிந்த மொழியில்
உன்னை அழைத்திட,
மலைகளிலும்,
நீர்களிலும் மூழ்கி,
உன்னை தேடிட,
பல ஆயிரம்
ஆண்டுகள் தாண்டியும்,
தேடல் தீராமல் - உன்னை
உணர மட்டுமே
முடிந்த எனக்கு,
பெயர் ஒன்று
தேடி சென்றேன்....
தோன்றும் பெயர்கள், - பல
கலகம் உண்டாகிட,
கருணை நீட்டும்
கரங்கள் முன்னே,
உன்னை கடவுள்
என்ற மத்தியில்,
அன்பு ,
என்ற சொல் புழங்கிட,
கனா கண்டேன் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jul 2025
நடைபயனம்
**நடைபயனம்**அந்த மேகக்கூடத்தின் மெத்தையில்,அதிகாலை துயில் கலைந்து,பறவைகளின் இசையில்,மரங்களின் நிழல் என்னிடம் கதைகள் சொல்ல கண்டேன்..திசைகள் பல அழைத்த ப...
12 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதைக்களம் - ஆரம்பம் - 1ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்ல...
28 Jun 2020
What if TEA is your best frien...
Tea - is not just a word, it's life. Single tea solves problems, helps for thought provoking ideas.It also helps in making friendship, making love, gi...