ஆதலால் இவர் கடவுளோ...
By Admin - 27 May 2021 643 0

மனிதன், குரங்கில்
இருந்து வந்தான் என்றால்,
பல குரங்குகள்
இன்னும் மனிதனாய்
ஏன் மாறவில்லை...
எட்டாவது பிள்ளை
தன்னை கொல்லும் என்று
அறிந்து - வசுதேவர், தேவகி
மதுரா சிறையில் அடைத்த
கம்சன் - ஏழு பிஞ்சை கொன்றான்,
இவர்களும் கொல்வான் என்று தெரிந்து
ஏன், ஏழு பெற்று எடுத்தார்கள்,
எட்டாவது பிள்ளையை மட்டும்
கரை சேர்க்க முயன்ற வசுதேவர்,
ஏன் மற்ற பிள்ளையை மறந்தார்..
காதலுக்கு கிருஷ்ணன்
முன்மாதிரி என்றாலும்,
வரலாறுகள் சொல்லும் சான்று
கிருஷ்ணன் 16,008 மனைவிகளை
கொண்டிருந்தார்...
எண்மனையாட்டி என அழைக்கப்பட்ட
எட்டு மனைவிகள் முதன்மையானவர்.
16, 000 பேர் சுதேசி மனைவிகள்..
கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற
பிறகு அப்பெண்களை அவர்களின்
குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால்
அனைவரையும் கிருஷ்ணர்
ஒரே நாளில் மணந்தார்
இது சாத்தியமா,
இது கதையா,
இது காவியமா,
இது கற்பனையா,
நரகாசுரன் இறந்ததால் தீபாவளியா,
இல்லை - கிருஷ்ணன் இவரை கொன்றதால்
தீபாவளியா...
என் நினைவு தெரிந்து நாட்கள்
முதலாய் - கிருஷ்ணன் பெயரை விட
நரகாசுரன் இறந்ததால் தீபாவளி என்று
கேட்ட கதைகள் ஆயிரம்..
கிருஷ்ணன் மகன் சாம்பன்,
சில சாபங்களும்,
மது பழக்கத்தினால்,
அழிந்தான் என்று சொல்வதும்
வரலாறு..
அன்றே, வணிகம்
இருந்தது ஆச்சர்யம்..
கிருஷ்ணன், ஏன்
மகனை தட்டிக்கேட்க வில்லை..
ஒருவேளை,
இந்த உலகிற்கு,
உபதேசம் சொல்ல,
தன் வாழ்வில் அனைத்தும்
இழந்தாரோ..
அன்றே தொடங்கியது,
கலி காலம்...
நம் அனைவரையும் காக்க,
அவதாரம் கொண்டாரோ...
ஆதலால் இவர் கடவுளோ...
காலங்கள் மாறினாலும்,
காவியங்களும்,
கற்பனைகளும்
பல கோடி ஆண்டுகள்
தாண்டியும் இன்று
நிழலாய் நின்று
நிஜம் போல் பேசுகிறது..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
30 Jul 2021
முகம்
தெரிவது ஒருமுகம்,ஒளிந்திருப்பது பல முகம்,எம்முகம் எவ்வரும்,அம்முகம் அவ்வரும்,நேரம் உருமாறும்;எது - நிஜமுகம்,யாரும் அறியோம்;உள்ளம் தெளிவினில்,முகமும் ம...
07 Nov 2024
தொலைந்தது
சில நிமிடம் ,என் மகளின் தூளியில் நான்...தொலைந்தது குழந்தை தனம் மட்டும் இல்லை,அம்மாவின் புடவை வாசமும் தான்......
07 Jul 2021
My Dear பொம்மை - விளையாட்டின...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்மீனாவின் சத்தத்தை கேட்...