இறுதி நிமிடங்கள்
By Admin - 21 May 2021 958 0

வாழ்க்கையின் சுவாரஸ்யமே,
தினமும்;
கடந்துப் போகும் சாலை,
பார்க்கும் மனிதர்,
உலாவும் வீட்டின் அறைகள்,
அணைக்கும் நெஞ்சங்கள்,
அன்பு பொழியும் விழிகள்,
சிரிக்கும் உதடுகள்,
சாயும் தோள்கள்,
உறங்கும் மடிகள்,
அம்மாவின் அன்புகள்,
அப்பாவின் நம்பிக்கைகள்,
நண்பனின் ஆறுதல்கள்,
காதலியின் கடைவிழிகள்,
மனைவியின் வெட்கங்கள்,
பிள்ளையின் முத்தங்கள்,
தேடும் உறவுகள்,
நம்பிக்கையாய் கடவுள்கள்,
சுமக்கும் பாரங்கள்,
கனவுகளின் பெட்டகமாய் தலையணைகள்,
உடுப்பின் அலமாரிகள்,
அழகிய பிம்பங்கள்,
வித விதமான காலணிகள்,
சுவைத்த உணவுகள்,
தாகம் தீர்க்கும் தண்ணீர்கள்,
சோகத்தை தீர்க்கும் தேனீர்கள்,
பறக்கும் பறவைகள்,
ஊரும் பூச்சிகள்,
உலவும் பிராணிகள்,
பிடித்தப் புகைப்படங்கள்,
இரசித்த மனிதர்கள்,
மனிதர்களின் மறுபக்கங்கள்,
தீராத நோய்கள்,
தீரும் பிரச்சனைகள்,
பார்க்காத துன்பங்கள்,
பார்க்க முடியாத இன்பங்கள்,
மகிழ்ந்து நெகிழுந்த நொடிகள்,
தன்னை மறந்த தென்றலின் ஒலிகள்,
இரகசியம் அறியாத மனதின் ஆழங்கள்,
பாதை அறியாத எண்ணங்கள்,
இரவின் தனிமைகள்,
பகலின் ஓட்டங்கள்,
வருங்கால சிந்தனைகள்,
கவலையில் சிரிப்புகள்,
சிரிப்பில் கவலைகள்,
வெட்டி கௌரவங்கள்,
வேண்டா வீராப்புகள்,
கோபத்தில் வார்த்தைகள்,
வார்த்தைகளின் கோர்வைகள்,
கேட்க துடிக்கும் மன்னிப்புகள்,
ஓரமாய் வருத்தங்கள்,
மனதோரமாய் சாபங்கள்,
எதற்கும் தெரியாது,
நமக்கும் அறியாது,
எப்பொழுது நிற்கும்,
நம் காலஓட்டங்கள்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Dec 2020
இறைவா
ஆயிரம் விழி கொண்ட இறைவா,உன்னொரு, விழியால் என்னை பாராயோ, உன் மொழியில் அழைத்தால் வருவாயோ,ஊமையாய் நின்றால் என் செய்வாயோஆதி...
11 Jul 2020
ஒற்றை பார்வை தீண்டலில்...
ஒற்றை பார்வை தீண்டலில்,என்னை என்ன செய்தாயோ,சின்னஞ்சிறு குறுநகையில்,புதுமொழி ஒன்றை தந்தாயோ..அன்பே, எனதுயிரே,நானாக நானில்லையே,உன்னை கண்டதும்,தாய்மொழி து...
25 Jun 2025
தவறில்லை
நான் உழைத்தது தவறில்லை,என் உழைப்பை எங்கு போடவேண்டும் என்று தெரியாமல்உழைத்ததுதான் தவறு....- கல்யாணராமன் நாகராஜன் ...