இறைவா
By Admin - 05 Dec 2020 1082 0

ஆயிரம் விழி
கொண்ட இறைவா,
உன்னொரு, விழியால்
என்னை பாராயோ,
உன் மொழியில்
அழைத்தால் வருவாயோ,
ஊமையாய் நின்றால்
என் செய்வாயோ
ஆதியும்
அந்தமும் நீயே,
யாதுமாகி இருப்பவனே,
எங்கும் எதிலும்
ஓளிந்திருப்பவனே,
நின்னை - தேடுகிறேன்
எங்கெங்கோ
மலைகளில், நீரில்
மூழ்கி மறைந்தாயோ
நினைத்தால் வருவாயோ,
அழுதால் துணை நிற்பாயோ,
இறைவனே,
உன்னை வெளியில்
தேடுவது ஏனோ - என்னுள்
நீ யும் இருப்பாயோ,
உணர்வுகள்;
ஆயிரம் இருப்பதால்,
அன்பில் மட்டும்
தெரிவாயோ..
வேதங்களின்
அர்த்தமும்; நீயே,
வேள்விகள் தரும்
கண்ணீரும் நீயே;
சிதறிய துகள்
கற்கள் கொண்டு
சொற்பனம் கண்டனே
அருவமாய் யல்ல
உருவமாய் கொண்டேனே..
அழைத்திட பல
பெயர்கள் கண்டனே
உன்னை அருகில்
காண பல கோடி
தர கண்டனே..
வறுமையில் வர
ஏன் மறுப்பாயோ..
உன் பாதமே
கதி யென்று
விழுந்தேனே;
என்னை மேலேற்ற
சக்தி தருவாயே..
இறைவா,
நீயே
உயிராய் கலந்தாய்..
உணர்வாய் புரிந்தாய்..
வரம்கள் ஏதும் தேவையில்லை,
துணையாய் மட்டும் வருவாய்..
என் இறைவா, இறைவா...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
30 Mar 2024
எல்லாம் அவன் செயல்...
ஹைக்கூ...இரத்த வெள்ளத்தில் கடைசி நிமிடம் - நான்;அடிபட்ட லாரியின்,நெற்றியில் "எல்லாம் அவன் செயல்"...
28 May 2021
மாற வைக்கும் மாயை...
போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து,உண்ணும் உணவு,உடுத்தும் உடை,காதல்,அன்பு,காமம்,பெருமை,புகழ்,அனைத்திற்க்கும்போதும் என்ற நிலை உண்டு,ஏனோ விதிவ...
03 Dec 2022
கண்டேன் காருண்ணியன்...
கலைந்த நரை தலையும் சிறு திருநீறும்,கந்தல் வேஷ்டியும்,தோளில் அங்கவஸ்திரமும்,விழித்திரை மறைக்கும்பெரிய அளவு பழுப்பு மூக்குக்கண்ணாடியும்,துணைக்...