Nice saying that Love is god
அன்பு பழகு, அன்போடு பழகு
By Admin - 26 Apr 2021 1112 2

கடவுளின் பெயர்களில்
மதம் பிரிக்கப்பட்டதா,
மதங்களின் அடிப்படையில்
கடவுள் உருவாக்கப்பட்டதா;
சாதிகளின் தலைவனாய்
மதங்கள் உருவானதா,
மதங்களின் அடிப்படையில்
சாதிகள் பிரிக்கப்பட்டதா;
இதில் தலைவன் எவன் ?
கடவுளா,
மதமா,
சாதியா...
விடை தேடி சென்றேன்,
கண்டேன் - சற்றே அறைந்த
சுளீர் வெயிலை போல,
புதிதாக சில கதைகள்,
இவைகளின் சாயால் என்று சொல்லி,
நம்மை கடவுளிடம் சேர்க்கும்
தூதுவராக - பல குருமார்கள்;
கடவுளுக்கு ஏனோ - நம் குரல்
கேட்க மறந்த காரணம்...
இருந்தும் - ஓயவில்லை
கோயிலின் கூட்டம்...
துன்பம் தழுவுகின்ற நொடியில்,
கோயிலுக்கு சென்றேன்,
மதங்களின், சாதிகளின் அடிப்படையில்,
பல கடவுள் வீற்றிருக்க கண்டேன்,
அருகில் கடவுளின் நேரடி தூதுவரும்
கதைகள் சொல்ல கண்டேன்..
யாரை நம்புவது ?
கல் போன்ற
அழகிய சிலையா,
தத்துவங்கள், கதைகள்
சொல்லும் தலைவனா..
எதுற்கும், யாரோ ஒருவர்
துணை வந்தால் என்ன,
அனைவரையும் தொழுவோம்
என்று - பகுத்தறிவு மறந்து
சரணடைத்தேன்..
பல யுகங்கள்,
பல குருக்கள்,
பல மனிதர்கள்,
பல மிருகங்கள்,
பல யாகங்களும்,
பல வேதங்களும்,
பல தேசங்களும்,
ஒன்றாய் சொன்ன வார்த்தை
ஏனோ தெரியாமல்,
பகுத்தறிவு இல்லாமல்,
இன்றும் பொய்யாய் ஓடுகிறோம்...
சாதி என்பது;
கை அளவு நம்பிக்கை,
மதம் என்பது;
மனதோடு உள்ள நம்பிக்கை,
கடவுள் என்பது;
அன்பை போன்று,
தூணிலும் நேசி,
துரும்பிலும் நேசி..
அன்பு பழகு,
அன்போடு பழகு..
Add Your Comments
Say Something
Comments
from Chandramouli Subramanian at 2023-01-06 23:39:50
from Velmurugan Umapathy at 2021-06-12 06:28:33
from Velmurugan Umapathy at 2021-06-12 06:28:33
Nice...
See More Stories
16 May 2020
Memories are always Treasure -...
www.amdiya.in - we always like to live our childhood days or atleast look back, so we end up looking at our old photos. But I always wished how I look...
11 Oct 2020
எங்கே, நான் தேடுவேன்...
நொடி நேரம் என்னை;காணா விடில்வாசலில் வாடிடும் உந்தன்அழகிய முகம் - இனிஎங்கே, அந்த பாசத்தைநான் தேடுவேன்...சிறு காய்ச்சல் வந்து நான் துடிக்க - என்&nb...
18 Aug 2025
புதிதாய் ஒரு உலகம்...
பிரபஞ்சத்தின் பெரும் வெடிப்பு,இயற்கையின் சீற்றம்,மூச்சு திணறல்..உலகம் முழுவதும் இருண்டது..புதிதாய் ஒரு உலகம்;அங்கே,தீடிரென்று முளைத்த செடியில், வ...