அம்மா
By Admin - 03 Mar 2024 594 0

அவ்வும் நீ,
அகாரமும் நீ,
அருவியின் ஓசை நீ,
காற்றின் ஒலியும் நீ,
வேதங்கள் ஓதும், நாதமும் நீ,
யாகங்கள் தரும் சாம்பலும் நீ,
அன்பில் தெரியும் உருவமும் நீ,
ரௌத்திர தனலும் நீ,
என்னுள்; கருணையும் நீ,
மலரின் அழகும் நீ,
உருகும் பனியும் நீ,
புல்லின் பனித்துளி நீ,
இளம் வெயிலும், நிழலும் நீ,
இரவின் குளிரும் நீ,
பறவையின் சிறகும் நீ,
புடவையின் வாசமும் நீ,
தோளும் நீ, தோழமையும் நீ,
என் - பிறப்பும் நீ, வாழ்வும் நீ,
உணர்வும் நீ, உயிரும் நீ,
ஏழ்மையும் நீ, உயர்வும் நீ,
என்னுள் பல - நீ யிருப்பதால்,
நான் நானாக அல்லை - நீயே
நானென்று; இன்று என் மகளாய்
நாயகியுள் வந்தாய் - அம்மா !!!
எழுத்தும், கற்பனையும்,
கல்யாணராமன் நாகராஜன்,
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
காற்றாய் நானும் கரைந்தேனே...
என் கனவினில், கனவினில்வந்து வந்து செல்கிறாய்உன் நினைவுகள் - என்னைதேடி தேடி கொல்லுதேஉன் கரு விழிகள் - என்னை கண்டதும் இதயம் களவு போனதே, நீ என்...
11 Jul 2020
மாற்றம் ஒன்றே மாறாதது......
மனிதர்கள், உண்மையிலே ஒரு அதிசய பிறவி.. சில வருஷத்துக்கு முன்னாடி, மக்களோட மனநிலை வேற,இப்போ வேற..மனிதனே, மிருகமாய் மாறிவிட்டாலும்..அதன் இரக்க...
05 Jul 2021
My Dear பொம்மை
ஒரு அழகான வீடு... அதில் கார்த்திக் அப்பா, மீனா அம்மா, மூன்று வயது மகள் தேஜாஸ்ரீ..இங்கே சந்தோஷத்திற்கு பஞ்சமில்லை.. தேஜாவால் அந்த வீடே நிரம்பியிருந்தது...