நான் யார்
By Admin - 10 Jul 2025 430 0

நான் யார் ?
என் வாழ்க்கையில்,
நான்,
ஒன்றும் எழுதப்படாத
வெறும் காகிதம்..
என்னை...
கடந்தவர்கள்,
கடக்கின்றவர்கள்,
கடக்கப்போகிறவர்கள்
காலம் கருதி,
நானே பெயர் கொடுத்துவிட்டேன்.
அவர்கள் தேர்ந்துடுத்தால் போதும்..
சிலருக்கு நல்லவன்,
சூழ்நிலையால் துரோகி,
கேட்டதும் கொடுத்தேன் கொடையாளி,
கொடுக்க முடியாமல் திகைத்தேன் சுயநலவாதி,
கொடுத்தவனுக்கு கடனாளி,
காலத்தால் ஏமாற்றுக்காரன்,
சில நேரங்கள் ஒன்றும் இல்லாதவன்,
பல நேரங்கள் ஒன்றும் அறியாதவன்,
சில சமயம் உண்மையை நேசிப்பவன்,
அதனால், பொய்க்கு சொந்தமானவன்..
கோபத்தை கையாளுபவன்,
பலருக்கு பொறுமை இழந்தவன்..
சில அழுத்தத்தால் தன்னிலை மறந்தவன்,
அதனால் வாழ்க்கையை கவனிக்க மறந்தவன்..
பல முகம் கொண்ட பன்முகக்காரன்,
நடிக்க தெரியாது என்று, நடிப்பவன்..
பொதுவாக,
எல்லோரும் ஒரு மனதாக
புரிந்துகொண்டதால்,
இன்னும் வாழ்கிறேன்
மனிதன் என்ற பெயரோடு...
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Jun 2025
ஏக்கம்
பல வண்டிகள் மாறி வந்து நின்ற அப்பாவை காணாதக் கூட்டம், ஏனோ சற்றும் முன் காரில் வந்த உறவை ஏன் கொண்டாடுகிறது,என்று ஏக்கத்தோடு பார்த்...
31 Jan 2022
காதலாகி....
கார்மேக குழலிஎன் குழவி நீயடிவெட்கம் நூறு வகைகண்டனே இன்றொரு முறைவிழுந்தாலும்விழ மாட்டேன்தழுவிடுவேன் உன் ஆவியைவான் விழியாலே,அதுரம் வாய் திறந்து,மது...
06 May 2024
வாழ்க்கை
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்,வறண்டால் போகிறார்கள்,இறந்தால் அழுகிறார்கள்,மறுநாள் மறக்கிறார்கள்,இடம் யிங்கே பெரியது,மனங்களோ சிறியது !!!-கல்யாணராமன் நாகராஜ...