படிக்காத மேதை
By Admin - 20 Jul 2025 483 0

வயிறு பசித்தவனுக்கு,
புத்தியும் வளர்ந்திட,
உணவோடு சேர்த்து - வாய்ப்
பேசும் புத்தகத்தை தந்தவர்..
வாழ்க்கையை தொடங்க,
தொடக்கப் பள்ளியும்,
உயர்ந்து கொண்டே செல்ல,
உயர்க் கல்வியும்,
கல்வி இல்லாத வீடுகளுக்கு,
கல்வியை வாசலுக்கே,
கொண்டு சென்ற கல்வித் தந்தையும் அவர்..
ஆடைகளின் வேறுபாட்டை ஒழிக்க,
சீருடையில் புது சமத்துவத்தை தந்தவர்,
கல்வியின் தரத்தை தரமொடு இருந்திட,
ஒரே தரமாய் தந்தவர்...
ஒரு மரமாய் நின்று,
நூறு நிழல்களை தரும்
கன்றை உருவாக்கினார்..
வறண்ட பூமியில்,
கல்வித் நதியை ஓட வைத்த
கண் கண்ட தெய்வம் அவர்..
குடிசைகளின் தலைமுறை தழைத்திட,
பிள்ளை சொல்லி தகப்பன் கையெழுத்திட,
புத்தகத்தையும் குறிக்கோளையும்,
வித்திட்ட வித்தகர்...
படிக்கவில்லை, ஆனால்
ஆயிரம் பேரைப் படிக்க வைத்தவர்..
திட்டங்கள் ஆயிரம் வந்தாலும்,
அடிப்படை கல்வி கட்டமைப்பை
மாற்றிய படிக்காத மேதையவர்..
மண்ணுக்கு நீர்ப்போல்.
தமிழுக்கு "ழ" கரம் போல்,
கல்விக்கு என்றுமே,
கண் திறந்தவர் - எங்கள்
தன்னலமற்ற பெருந்தலைவர்
"காமராசர்' அவர் !!!
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Sep 2025
தலையணை
யாரிடமும் சொல்லாத கதை,மறக்க வேண்டிய இரகசியம்,அனைத்தும், புதைந்து போனதுதலையணையில்......
23 Sep 2023
புண்ணியம்
கோவிலுக்கு செல்வதும்,தர்மம் செய்வதும்,சுயநலமே...கடந்த காலத்தை மறக்கநிகழ் காலத்தை சரி செய்யபுண்ணியம்...கோவில் படிக்கட்டும் கல்லே,கோவில் சிலையும் கல்லே,...
07 Jun 2021
பரம ரகசியம்...
யாருக்கும் தெரியாது,தெரியவும் கூடாது - யென்றுநினைக்கும் பொழுதில்,தெரிந்து விடும் - ஒரு அதிசயம்கருவில் - அணுக்கள் உருவம் முதல் - நம்மைஇன்னுயி...