வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
By Admin - 21 Jul 2025 531 0

*வான்புகழ் கொண்ட தமிழ்நாடு*
தமிழகமாய் பிறந்து, தமிழ்நாடாய் வளர்ந்த
இயற்கை அன்னையின் பெருந் தாரகையே...
மஞ்சளும், மங்களமும் உன் பிறப்பிடமே,
மண்வாசை எங்கும் இருக்கும் பழம்பரம்பை நாடே..
சங்கம் வளர்த்த சங்கரித்தேசமே,
இலக்கியம் தந்த தொல்காப்பியமே,
குமரி கண்டம் கண்ட தொன்னிலமே,
வாழ்வியலை சொன்ன வள்ளுவனும்..
காலம் கடந்து வாழும் புகழுமே...
எத்திசையும், பாடும் உனது துதியே,
பெண்மையும், தெய்வமும் ஒன்றென கண்ட மாநிலமே,
நீருக்கும், நெருப்புக்கும் கண்டக் கோவிலே,
தொடக்கமும், முடிவும் திருநீறும், மண்ணுமே..
அறிவியலை வளர்த்த முதல் மாநிலமே,
காவேரியும், வைகையும் பேசிடும் மெல்லிசையே,
கலைகள் வளர்த்த கலைத்தாயும் அவளே,
வீரம் சொல்லித்தந்த, வீரமகளும் இந்நாடே..
ஓர் இனமாய் வாழும் மக்கள்,
ஒற்றுமையில் திகழும் பலக் குரல்கள்,
படிப்போடு, சேர்த்து உணவையும் தந்தவளே...
வெற்றி கொண்டு நிலைத்த தமிழ்நாடே வாழ்க !!!
- *நா.கல்யாணராமன், சென்னை*
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
09 Jun 2025
ஏக்கம்
பல வண்டிகள் மாறி வந்து நின்ற அப்பாவை காணாதக் கூட்டம், ஏனோ சற்றும் முன் காரில் வந்த உறவை ஏன் கொண்டாடுகிறது,என்று ஏக்கத்தோடு பார்த்...
11 Jul 2020
காற்றாய் நானும் கரைந்தேனே...
என் கனவினில், கனவினில்வந்து வந்து செல்கிறாய்உன் நினைவுகள் - என்னைதேடி தேடி கொல்லுதேஉன் கரு விழிகள் - என்னை கண்டதும் இதயம் களவு போனதே, நீ என்...
28 May 2021
மாற வைக்கும் மாயை...
போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து,உண்ணும் உணவு,உடுத்தும் உடை,காதல்,அன்பு,காமம்,பெருமை,புகழ்,அனைத்திற்க்கும்போதும் என்ற நிலை உண்டு,ஏனோ விதிவ...