நல்ல நண்பன் வேண்டுமென்று

By Admin - 28 Mar 2020 979 1

தனெக்கென்ன வாழாமல்
பிறர்க்கென்ன வாழும்
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...

நிழலென நீயும் வருவாயே,
விழ எழக் கையொன்று தந்தாயே;
விழிகளிலே நீர் வந்தாலும்,
துடைக்கவும் தோளொன்று தந்தாயே...

உயிரென நீயும் இருப்பாயே,
உறவென நீயும் கலந்தாயே...
நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...

திசைகள் தெரியாமலே,
நானும் இங்கே அலைந்தேனே;
புது சிறகாய் பறக்க,
வானம் ஒன்று தந்தாயே...

உருவத்தை காட்டும் கண்ணாடியும்
தோற்கும் உன் முன்னாடி...
வார்த்தை என்னும் விதையில்,
நம்பிக்கை ஒன்றை தந்தாயே...

ஒன்றாய் சேர்ந்து நின்றாலே,
வெற்றிகள் குவியும் சொன்னாயே!

நண்பனே!
உன்னைப் போலவே,
யாருமில்லையே...

Add Your Comments

Say Something

 

Comments

from Sudhakar Arjunan at 2021-06-17 08:59:10

When was this photo taken kalyan.