நகரத்தின் உள்ளே தட்டுமுட்டு சந்தில் குடியிருக்கும் அன்றாடங்காய்ச்சிகளின் வீடுகாளில் தினந்தோறும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சி தான் என்றாலும் நடுத்தர மக்களுக்கு இது போன்ற நிலைமையை தாங்குவதற்கு மனவலிமை இல்லாததால் நாட்டில் தற்கொலைகள் நாகரீகமான மோசடி நடக்கிறது. இந்த கதை நாட்டு நடப்பை கண்ணாடிபோல காட்டுகிறது. இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை நெறிபடுத்த வேண்டும். வாழ்த்துக்கள்.
மீனாவும் MIDDLECLASS அப்பாவும் பாடம் 3
By Admin - 12 Jun 2021 1065 3

கதைக்களம் - ஆரம்பம் - 1
ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்லாமல், முடிந்தவரை ஐம்பது ரூபாய்க்கு என்ன முடியுமோ அதை வாங்கி தருவார்..
ஒரு நாள், மீனா டிவி யில் முட்டை பார்த்துவிட, அப்பா சற்றும் யோசிக்காமல், உண்டியல் ஒரு குலுக்கு குலுக்கி ஒரு பத்து ரூபாய் தேற்றிக்கொண்டு, கடைக்கு செல்ல புறப்பட்டார். உடனே, உள்ளிருந்து ஒரு குரல் மட்டும், உண்டியல் சத்தம் கேட்டுச்சு... அதுல இருக்கறதே இருபது ரூபா, பால் வாங்கவே நாலு ரூபா இல்ல..நீங்க எங்க போறீங்க என்று சற்று கடிந்து கொண்டாள்.. சமையல் அறையில் இருந்து வெறும் பேச்சு மட்டும் வந்தது.. சற்றும் யோசிக்காமல், பால் வாங்க போறேன்..
உடனே மீனா, அப்பா எனக்கு lollypop வேணும், அதுவும் பிங்க் கலர் தான் வேணும்.. கண்டிப்பாடா.. கையில் இருபது ரூபா - என்ன செய்யவது ஒரு அப்பாவாக.. பால் வாங்கவா, முட்டை வாங்கவா, pink lolly pop வாங்கறதா... எதுவும் யோசிக்காமல், சட்டென்று ஒரு முடிவு எடுத்தேன்.. முதலில் செப்பல் போடுவோம் என்று...
மளிகை கடை வெறும் 10 நொடிகள், ஆனால் என் சிந்தனைக்கும், காலுக்கும் பல மயில் தூரம்.. பொறுமைக்கே கோவம் வருவது போல், மிக பொறுமையாக நடந்தேன்..
ஆனால், அங்கே கண்டே ஒரு சம்பவம்.. என் வாழ்க்கையும், எண்ணத்தையும் மாற்றிவிட்டது..
கதைக்களம் - ஆரம்பம் - 2
அங்கே ஒரு அரசாங்க குப்பை தொட்டி, சில நாய்கள் அங்கே சிதறிக்கிடக்கும் உணவுக்காக போட்டி நடந்து கொண்டி இருந்தது. சில வெளியே, சில உள்ளே..கடுமையான நிலவரம்.
அதன் அருகே, சில நாய்களை விரட்டிவிட்டு கொண்டே, அந்த தெருவிற்கே சோறு போடும் சிலிண்டர் போடும் 40 வயது நடுத்தர நபர் தன் காலை உணவை, மதியம் 12 மணிக்கு சாப்பிட்டு கொண்டு இருந்தார்.. கிழிந்த செப்பல், தலையில் இருந்து கால் வரை வியர்வை துளிகள், கையிலும், முகத்திலும் சாயம் போன்று ஏகப்பட்ட கறைகள், வெளிப்புறம் அழுக்கு நிறைந்த தண்ணி பாட்டில், ஒரு கையில் உணவு, ஒரு கையில் நாய்களை விரட்டவும், அந்த தெருவில் ரயில் தவிர அணைத்து வாகனங்கள் செல்ல கூடிய வழி, அவ்ளோ குப்பை பறந்து கொண்டே இருக்கும்...கண் கலங்கியது...
காரணம், சற்று முன்...
நான் கடைக்கு செல்ல கிளம்பும் போது, என் வீட்டு calling bell , டொங் டொங்..டொங் டொங்..
மீனா கதவை திறந்தாள்.. அங்கே ஒருத்தர், அவருடைய செல்லில், மீனா கதவை திறந்தது கூட தெரியாமல், அவர் காசு இருந்த முட்டை வாங்கி தர மாட்டேனா, கைல பத்து பைசா கூட இல்ல.. இப்போ தான் டெலிவெரிக்கு வந்துருக்கேன், சம்பளம் கூட போடல.. காலையில, குடிக்க காபி கூட இல்ல, கேட்ட பால் இல்லன்ற, அப்போ வீட்டுல என்ன தான் வெச்சுருக்க..நான் தண்ணிய மட்டும் குடிச்சுட்டு எப்படி வேலை செய்யறது, நான் செய்யுற வேலைக்கு, மூணு இல்ல ரெண்டு வேளையாவது சோறு திங்கவேண்டாமா... அந்த பகுதியில் பதில் வரவில்லை போல, இவரோ ஹலோ ஹலோ என்று கத்தி கொண்டு இருந்தார், சட்டென்று அவரது போன்-இல் loud speaker போட்டு ஹலோ ஹலோ, இருக்கியே, இல்ல அப்படியே போய்ட்டியா என்று கத்த, வந்த பதில் அவருக்கு மட்டும் அல்ல, எனக்கும் ஆச்சர்யம்.. அப்பா, வரப்போ எனக்கு முட்டை வாங்கிட்டு வாப்பா. காலையில சாப்பிடல, அம்மா கிட்ட கேட்டேன், அம்மா பக்கத்துல கடைக்கு போயிட்டு, கடன் சொல்லி ரெண்டு இட்லி வாங்க போயிருக்காங்க.. உங்களக்கு தண்ணி சாதம் கொடுத்துட்டாங்க, அம்மா பாவம் எதுவும் இல்ல பா.. நீங்க ஒரு முட்டை வேண்டாம், ரெண்டு...இல்ல ல்ல்லா. மூணு வாங்கிட்டு வாங்க.. எனக்கு, அம்மாக்கு அப்பறம் உங்களக்கு.. சற்றும் யோசிக்காமல், கண்டிப்பாட..
கையில் பத்து பைசா இல்லை என்றால் கூட, மகள்கள் மத்தியில் அப்பாக்கள் என்றும் கோடீஸ்வரர்கள்... இல்லை என்ற வார்த்தை தமிழ் அகராதியில் கூட மறைந்து விடும்.
அப்படி புலம்பியவர் வேற யாரும் இல்லை, சிலிண்டர் போட வந்த அந்த நடுத்தர நபர். சிலிண்டர் பில்லில் கையெழுத்து வாங்கி கொண்டு, சார் வணக்கம், வருட்டுமா சார் என்று சொல்ல நான் புரிந்து கொண்டேன், ஆனால் என்னிடம் கொடுக்க எதுவும் இல்லை அந்த இருபதை தவிர, அதற்கும் நீண்ட பட்டியல்.. சற்றும் யோசிக்காமல், அவர் அடுத்த தரவ முடிஞ்சா தாங்க சார், சம்பளம் வேற இல்லை, ரெண்டு மாடி தூக்கி வரேன்.. தண்ணி குடிக்கீறாங்களா அண்ணா, இல்லை சார் வேண்டாம்.. பரவாயில்ல கொஞ்சம் குடிங்க என்று சொல்லி முடிப்பதிற்குள், மீனா தண்ணி பாட்டில் அவர் கையில் தர, அப்பாக்கு ஏக குஷி... மனதிற்குள், உன் நிலைமை தான் எனக்கும் அண்ணா..
அவர் போனதும், மீனா, அப்பா நீங்க கடைக்கு போயிட்டு வரும் போது, ஒரு முட்டை இல்லை, ரெண்டு வாங்கிட்டு வாங்க அந்த அங்கிள் வீட்டு பாப்பாக்கு ஒன்னு, எனக்கு ஒன்னு.. பின்னாடியே ஒரு குரல், சீக்கிரமா போய் பால் வாங்கிட்டு வாங்க, பாப்பாக்கு கஞ்சி குடுக்க கூட பால் இல்லை, ம்ம்ம்..அப்படியே கொஞ்சம் பச்சை மிளகையும் வாங்கிட்டு வாங்க..
இந்த யோசனையில் தான், அவரை கண்டதும் நான் தடு மாறி விட்டேன்..
அவர் அருகில் சென்றதும், இன்னும் பதறி போனேன்,
இது போல் எங்கும் நடக்கு கூடாது.. ஒருவருக்கும் நடக்க கூடாது..
கதைக்களம் - ஆரம்பம் - 3
அந்த குப்பை தொட்டியில், வீணாக்கப்பட்ட உணவுகள் ஏராளம். ஆனால், அலைபேசியில் சொன்னது போல், தண்ணி சாதம் இல்லை..வெறும் காய்ந்த ரெண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் தொட்டு தொட்டு வேகமாக முழிங்கு கொண்டு இருக்க..விக்கல் ஒருபக்கம், நாய்களின் தொல்லை ஒருபக்கம்..
அண்ணா அண்ணா, கொஞ்ச பொறுமையா சாப்பிடுங்க, போன்-ல பேசறப்போ சாதம் இருக்கு சொன்னாங்க உங்க பொண்ணு.. ஹ்ஹஹ்ஹா அட நீங்க வேற சார், எனக்கு சாப்பிட ஏதும் இல்லனா தெரிஞ்சா என் பொண்ணு சாப்பிட மாட்டா, அதா என் பொண்டாட்டி பொய் சொன்னா.. அதுவும் இல்ல சார், போன் எடுத்தது என் பொண்ணு தான் எனக்கு தெரியும், நான் பேசறது புரியாது ஆனா கோவமா இருக்கேனு தெரியும்.. அவ சாப்பிடலான நான் கோவப்படுவேன், அதான் சும்மா கத்தினேன்.. இப்போ, என் பொண்டாட்டி கண்டிப்பா என் பொண்ணுக்கு ரெண்டு இட்லி தந்துருப்பா. அந்த சந்தோஷம் போதும் சார்.. இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கறதே நம்ம புள்ளைங்க காகத்தான் சார்.. வேற என்ன வேணும்...பேச பேச.. ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்.. நூறு ஆயுசு சொல்லல, அவ தான் சார்..
ஹ்ம்ம் சொல்லு, என்ன... lock down போட்டதுல தள்ளு வண்டி கடைய ராசாத்தி பாட்டி போடல.. நீங்க வரப்போ எதுனா வாங்கிட்டு வாங்க, கொஞ்சமா ரவை இல்லனா அரிசி. இன்னிக்கு கதையை உப்புமா வெச்சு சமாளிச்சுரலாம், நாளைக்கு பொழப்போ விடிஞ்சா பாத்துக்கலாம்.. சீக்கிரமா வாங்க..
ரெண்டு இட்லி வாங்கவே துப்பு இல்ல, இதுல ரவா, அரிசி..வெய் வரேன்..
அந்த காய்ந்த ரொட்டியும், அழகாக மடித்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு, தன் மூன்று சக்கர மிதி வேண்டிய, சற்று அழுத்தம் அதிகமா கொடுத்த மிதிக்க.. அண்ணா, ஒரு நிமிஷம்.. நீங்க வீட்டுக்கு வந்தப்போ, பணம் பாக்கெட்-ல இருந்துச்சு கவனிக்கல, இப்போ கடைக்கு போற வழி, எதர்ச்சியா உங்கள பார்த்தேன்.. அதான் என்று இழுக்க.. சார், எனக்கு சம்பளம் வரல உண்மை தான், சோத்துக்கு கஷ்டம் உண்மைதான்.. ஆனா பிச்சை எடுக்க மாட்டேன் சார்.. மன்னிச்சுக்குங்க.. என் வலி உங்களக்கு வீட்டுல தெரில, உங்க வீட்டுல இருக்கற வலி எனக்கு தெரில.. அனுதாபம் வேண்டாம் சார்... அடுத்த தடவ, சேர்த்து கொடுங்க... இந்த காசுக்கு, என் பேர் சொல்லி உங்க பொண்ணுக்கு முட்டை இல்லனா lollypop வாங்கி கொடுங்க, என் பொண்ணுக்கு கொடுத்ததா நினைச்சுக்கிறேன்..
பதில் ஏதும் இல்லை, பொளேர் என்று அறை விழுந்தது போல் இருந்தது...
என் மொபைல் சத்தம் கூட கேட்கவில்லை, சிந்தனை எங்கோ சென்றது.. ஒரு தனியொரு மனிதனுக்கு உணவு இல்லை, குப்பை தொட்டில அவ்ளோ சாப்பாடு.. சுத்தி எல்லாம் வேடிக்கை பாக்குறாங்க, எதுக்காக எல்லாரும் ஓடறாங்க புரியல.. நம்ம வாழக்கை எதை நோக்கி போகுதேனே தெரில..ஹ்ம்ம்ம்... அய்யயோ, அய்யயோ எவ்ளோ நேரமா போன் அடிக்குது தெரில, 5 missed call .
ஹலோ, எங்க இருக்கீங்க, பக்கத்துல இருக்கற கடைக்கு போய்ட்டு வர இவ்ளோ நேரமா.. காசு கொடுத்து வாங்கறவன் சீக்கிரமா வரான், கடன் தானே சொல்ல போறீங்க..சீக்கிரமா வாங்க..
மீனா உங்கள கானும் அழறா, கூடவே பசில கத்துறா.. பால் 1 பாக்கெட் போதும், நமக்கு டீ வேண்டாம் ரெண்டு நாளைக்கு, மீனாக்கு வேணும் பாலு. அரிசி இல்ல, தோசை ஊத்த மாவும் இல்ல, வரப்போ ரவா அப்பறம் அரை கிலோவா வாது அரிசி வாங்கிட்டு வாங்க..ரெண்டு நாளைக்கு உப்புமா நாம சாப்படலாம், மீனாக்கு ரசம் வெச்சுக்கலாம்.. அப்பறம் 5rs குடல் பாக்கெட் வாங்கிட்டு வாங்க.. வீட்டுல சாப்பிட ஏதும் இல்ல..
கைல இருக்கறது இருபது, பட்ஜெட் இருநூறு க்கு... சேரி நான் வெச்சுடுறேன்.. ஹலோ ஹலோ, ஒரு நிமிஷம் மீனா பேசறா, அப்பா, சொல்லுடா.. வரப்போ மறக்காம முட்டை வாங்கிட்டு வாப்பா...மூணு வாங்கிட்டு வா, அந்த அங்கிள் வீடு பாப்பாக்கும்.. என்ன மாதிரி தான அவங்களுக்கும் பசிக்கும்.. செரிடா கண்டிப்பா வாங்கிட்டு வரேன்.. அப்பா வீட்டுக்கு வந்து பேசுறேன்..சேரி..அப்பறம் அப்பறம், அப்பா pink lollypop ப்ளீஸ் அப்பா.. செரிடா.. எல்லாம் அப்பறம் வாங்கிக்கலாம், முதல சீக்கிரமா வீட்டுக்கு வாங்க, போன் கிடைச்சா போதும் பேசிட்டே இருப்பியே.. கெட்ட பழக்கம்.. நான் வைக்கறேன், வந்து சேருங்க..
அந்த நேரத்திலும்.. அப்பா அப்பா அப்பா.. சீக்கிரமா வாங்க என்று மீனாவின் அழுகுரலோடு இணைப்பு துண்டிக்க பட்டது..
உலகத்துல இருக்கற உயரமான எடுத்துக்கு போய், டேய் கடவுளே...அடி வயத்துலேந்து கத்துனும் போல இருந்துச்சு.. வெளில கடன் வாங்கறப்போ, கடன் சொல்லறப்போ, கடன் வாங்கிட்டு பதில் சொல்லறப்போ வர வலி இருக்கே, நூறு பிரசவத்துக்கு சமம்.. பணம் கேக்கறப்போ, இருக்கு இல்ல சொல்லிட்டா பரவாயில்ல, இல்ல சொல்லறதுக்கு கொடுக்கற அட்வைஸ், அதுவும் அந்த மளிகை கடைக்காரன்..
ஒரு வழியாக, கடைக்கு வந்து.. அண்ணாச்சி என்று சொல்ல...
சார் முதல பழைய பாக்கி, அப்பறம் தான் எல்லாமே...
பணம் இருந்தா சொல்லுங்க, இல்லாட்டி கிளம்புங்க சார்..
கூட்டத்தில், மீனாவின் நெருங்கிய தோழியும், அப்பாவும்.. சில அறியா முகங்களும்..
தொடரும்..
(வீட்டில் சந்திப்போம்)
Add Your Comments
Say Something
Comments
from சங்கரன் நாகராஜன் at 2021-06-17 08:59:59
from Archu at 2021-06-17 08:59:39
from Velmurugan Umapathy at 2021-06-17 08:59:35
from Archu at 2021-06-17 08:59:39
Waiting for the next part mama 😍
from Velmurugan Umapathy at 2021-06-17 08:59:35
Superb Kalyan...
See More Stories
18 Mar 2024
ஆசாமி
விபூதி, குங்குமம், பூ, கயிறு,பிரசாதம்எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..அவர்களிடம் ,சாமி விபூதி, சாமி குங்கு...
06 Apr 2020
Nostalgic Moments of my Life
Today is my Tamil star birthday, my mom has shared these photos and sent me wishes. Very nostalgic moments of my life. School ID card, Karate Photo, G...
09 Jun 2021
மீனாவும் Middleclass அப்பாவும்...
கதைக்களம் - ஆரம்பம் - 1ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்ல...