மனமே
By Admin - 16 Apr 2023 707 0

தரை தொடும்
முகில் அழுவதில்லை..
நதி சேர்ந்து
கடல் கலந்து
மீண்டும் துளிரிதே..
அவ்,
விதி என்றோ
கலங்குவதில்லை ?
மதி கொண்ட
மானுடர்
மயங்குவதென்ன !!!
நீ செய்வதை - பிரித்து,
இடார் க்கொண்டு,
தீர்ப்பு சொல்ல வானத்தில்
யாரும் யில்லை...
சித்தாந்தம் அறியாய்,
அந்தம் அறியோம்
வேதாந்தம் அறியோம்,
அந்தம் அறியாய்...
நித்திரை கொள்ளாத
மனமே - நீ
சற்று ஓய்வு கொள்...
கன நொடியில்,
பல தூரங்கள்
செல்லும் உன்
வேகத்திற்கு - நீ
ஓய்வுகொடு....
வானில் வரும்
தாரகை தரை
தொடும் நொடியில்
நீ தொடா தூரத்தில்
சென்றுவிட்டால் - நான்
எந்த சிந்தனைக்கு
வேள்வி வைப்பேன் ?
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
16 Feb 2022
உனக்காகவே
விரலோடு விரல் சேர்த்து போகாமல் போவேனோ..தோள்மேலே தலைசாய்த்துசாயாமல் சாய்வேனோ..உன் மடிமீது நானும்,உறங்கும் நேரம்,உயிர் போனாலும்,மீண்டும் பிறப்பேனோ....
05 Sep 2025
சிரிப்பு
சொல்ல முடியாத சொற்கள் எல்லாம்,சிறிய சலிப்பானசிரிப்பில் கரைந்துவிடும்......
11 Jul 2021
MY DEAR பொம்மை - எது நிஜம்...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்My Dear பொம்மை -...