அன்புள்ள அம்மா
By Admin - 23 Jan 2023 855 0

அன்புள்ள அம்மா,
உன்போல் யாருமில்லையே.
என்னை - உன்போல் யாரும்
அழைத்ததில்லையே..
நான் சொன்ன முதல்
கவிதையும் நீ - நான்
எழுதிய முதல் தமிழும் நீ...
அடிசில், அடி வாயில்,
யானை பலமென்றாய் - என்
பலம் நீதானென்று,
யாரிடம் சொல்வேன்...
ஆயிரம் உறவுகள் - நீ
சொல்லி தந்தாயே - பசி
என்னும் வார்த்தை
இருப்பதை - நீ
மறக்க செய்தாயே...
பல நாட்கள் வந்தாலும்
என்றும் கண்டதில்லை
உனக்கு விடுமுறை...
மண்ணில் வரும்
முன்னே - என்னை
வழிநடத்தி சென்றாயே..
அம்மா,
என்ற வார்த்தையில்லை
என்றால் - கடவுளும்
அனாதை தான்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Aug 2021
ஓடி வா முருகா...
ஆறுமுகனே, அய்யனேஓடி வா செய்யோனே..மஹாசேனா, மகேசன் சேனா,கூட வா கந்தனே...ஓடி வா முகனே..தேடி தேடி, அருள் பெற,கண்டேன் உன்னையே,நீயே - குகனே,என்றும...
16 May 2020
என்றும் கற்பனையே !!!...
அழகான காலை பொழுது,சுவாசிக்க தூய்மையான காற்று,தித்திக்கின்ற அளவில்லாத தண்ணீர்,உண்ண உணவு,உடுத்த துணி,உண்மையான உழைப்பு,நல்ல எண்ணங்கள், போதுமான செல்வ...