நண்பா நீ போராடு !!!
By Admin - 16 Oct 2020 1178 0

நண்பா நீ போராடு !!!
விழுந்தால் அழாதே,
அழுதால் துடிக்காதே,
நிழலும்; துணையின்றி போகும்..
ஜனனமும் புதியது,
மரணமும் பழையது,
இடைவேளையில் - சிறு பயணம்;
அது முடியும் வரை போராடு..
நேரங்கள், காலங்கள்
கூடி வருமா - உன் மதியை
கொண்டு விதியை
உடைத்திட போராடு
தினம் புது நாடகம்,
பல அறியா வேஷம்,
சூழ்நிலை மாறும்,
அது தரும் புது பரிமாணம்;
நொடிநேர துயலாய்,
உறங்கிவிட்டாலும்,
கனவுகளை நீ காத்திடு,
விடியும் நேரத்தில்,
அது தொடர்ந்தால்,
விடியலை நீ கண்டாய்,
அது வரை போராடு...
வானம் இருக்குது,
பூமியும் இருக்குது,
எழுந்து வா தோழா..
யாரென்ன;
வந்தார்கள்,
சொன்னார்கள் ,
உன்னையன்றி யாரும்;
உன்னையறிவதில்லை,
தேடல்கள் தீராமல்,
ஓய்வும் இல்லாது..
சிறகாய் பறந்திடு,
அந்த வானம்,
வசப்படும் தோழா !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jun 2020
What happened in Terrace?
It's an evening time.. may be around 6 pm. It was heavily raining for more than 3 hours, Water started flowing in the stairs like falls from the ...
05 Sep 2020
தெரிந்த கதை !!!...
உன் அப்பாவின், செருப்பின் தையலுக்கு மட்டும் தெரிந்த கதை - உன் புது செருப்பின் எண்ணிக்கை !!!...
05 Jun 2024
தூக்கம் வரலப்பா...
“என் ஆறு வயதில்அப்பா சொன்னார் கொஞ்சம் நேரம் தூங்குப்பா !!!தூக்கம் வரலப்பா ..அவர் சிரித்தார்..எழுபது வயதில்நான் சொன்னேன் கொஞ்சம் நேரம் தூங்கு...