எங்கே, நான் தேடுவேன்
By Admin - 11 Oct 2020 934 0

நொடி நேரம் என்னை;
காணா விடில்
வாசலில் வாடிடும் உந்தன்
அழகிய முகம் - இனி
எங்கே, அந்த பாசத்தை
நான் தேடுவேன்...
சிறு காய்ச்சல் வந்து
நான் துடிக்க - என்
மனம் கோணாமல்
உன் மடி தந்தாயே
இனி, எங்கே
நான் சாய்வேன்...
என் பெயரை உன்போல்,
யாரும் சொன்னதில்லையே,
உன் செல்லம் கொஞ்சும் பேச்சை,
எங்கும் கேட்டதிலேயே..
நான் அழாமல் இருந்திட,
உன் விரல் தந்தாயே,
என்னை அழவைத்து
போனதேனோ..
ஆயிரம் உறவுகள்; நீ
சொல்லி தந்தாயே,
உன் உறவை ஏன்
பாதியில் விட்டு சென்றாயே...
ஒரு வேலை, அடி வாயில்,
யானை பலம், என்று சொன்னாயே,
என் பலம் நீதானென்று,
யாரிடம் சொல்வேன் ;
என்னை விட்டு - எங்கே
போனாயோ...
மண்ணில் வரும்
முன்னே - என்னை
வழிநடத்தி சென்றாயே,
பசி என்னும் வார்த்தை
இருப்பதை - நீ
மறக்க செய்தாயே,
அந்த காலன் கேட்டிருந்தால்,
என் ஆயுளை - தந்திருப்பேன்
உனக்காக..
உன் அன்பை கண்டு;
ஏனோ பொறாமை - அருகில்
வைத்து அழகு பார்க்க - என்னை
அழவைத்தானே..
மீண்டும்,
நீ என்னிடம் வர வேண்டும்,
அந்த வரம் மட்டும் வேண்டும்,
என் மகளாக வேண்டும்..
அம்மா என்ற உருவில்..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Dec 2024
வீழ்கிறேன்
நான் வீழ்கிறேன்,அதுவும் நன்மைக்கே.என்னை தொடாதீர்கள்,வீழ்வதே நன்றி சொல்லத்தான்.தொட்டவனை திட்டியவாறு,வேருக்கு முத்தமிட்டுநன்றி சொன்னது -உதிர்ந்த பூக்கள்...
26 Nov 2022
மௌனம் அழகிய காதலே......
உன் கைகோர்த்து நானும் - போகின்ற தூரம்,தொடும் வானம் எல்லாம், தொடும் தூரமாகும்...உன் தோளோடு, நானும் - தலை சாய்த்துஉறங்கும் நேரம்,இரவ...
11 Jul 2020
கண் திறந்தால் ...
இருண்டு கிடக்கும் வாழ்வில்கண்களை மூடிக்கொண்டு, சுற்றும் பதறுகளே...சற்றே - கண் திறந்தால் அதன் ஒளி தரும் பல வண்ணம்தனிமை யென்பது, ஒடு...