சித்திரைப் பெண்ணே வருக!
By Admin - 23 Apr 2024 938 0

இளவேனில் பிறக்கும் முகிழே,
முழு மதியாய் திங்கள் அன்று;
வெய்யோன் மடியில் தவழும் தமிழே;
பேரிளம் பெண்ணே, நீ வருக !!!
வீட்டின் முற்றத்தில்,
அழகிய மாக்கோலம் யிட்டு,
சாணமும், பூக்களும் உறவாட,
எறும்புக்கு விருந்தாய்; இயற்கையின்
மொழியாய், நீ வருக !!!
முக்கனியோடு, பூக்களும்,
அணிகலனும்; நாணயமாய் வந்த
நாணயங்களோடு; இறைவா
அகவிழியோடு, காண்கிறேன் நிழல்காணில்..
மா யிலையிலும், மஞ்சளிலும்
எதிர்மறை எண்ணங்கள் கரைந்தோட;
வாழ்வில் சமநிலை உணர்த்தும்,
அறுசுவையாய்; புது பயணம் செல்ல
வா பெண்ணே...
சிரிப்போடும், சிறப்போடும்,
எழுச்சி கண்டேன்; நின் பிறப்பிலே
நிலமகள்; எங்கும் புன்னகை பூக்கட்டும்
வருகையை - வாழ்த்துகிறேன்,
பெண்ணே நீ வருக !!!
-
கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
18 Mar 2024
ஆசாமி
விபூதி, குங்குமம், பூ, கயிறு,பிரசாதம்எதை கொடுத்தாலும் - எதற்க்கு ?என்ற கேள்வி கேட்பவன் ஆசாமி..அவர்களிடம் ,சாமி விபூதி, சாமி குங்கு...
11 Jul 2020
கண் திறந்தால் ...
இருண்டு கிடக்கும் வாழ்வில்கண்களை மூடிக்கொண்டு, சுற்றும் பதறுகளே...சற்றே - கண் திறந்தால் அதன் ஒளி தரும் பல வண்ணம்தனிமை யென்பது, ஒடு...
19 Jan 2025
நன்றி பகலவா !!!...
தைத் திங்கள் தழுவியதமிழ் மகளின் தாலாட்டலில்ஈரைந்து மாதங்கள் சுமந்த,மேகக் கூட்டத்தில் ஓரமாய்ஒளிந்துக் கொண்டேவெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!சில மதங்க...