மீனாவும் MIDDLECLASS அப்பாவும் பாடம் 4
By Admin - 14 Jun 2021 967 0

கதைக்களம் - ஆரம்பம் - 4
சற்றென்று, மீனாவின் கண்களில் இருந்து, அடக்க முடியாத கண்ணீர் துளிகள்.. வார்த்தைகள் ஏதும் வரவில்லை, தேம்பி அழுகின்ற தழுத்த குரலில் அப்பா அப்பா என்று சொல்லி கொண்டே அழுக, அவள் கண்களில் இருந்து வரும் ஒவ்வொரு துளிகளும், அந்த காகிகத்தில் அப்பாவின் எழுத்துக்கள் எல்லாம் கரைந்து கொண்டே போனது.. நீ எங்க அப்பா இருக்க, இப்பவே இங்க வாப்பா, உன்ன கட்டி புடிச்சுகிட்டு அழணும் போல இருக்கு, எனக்கு ஆறுதல் சொல்ல மாட்டிய அப்பா... எங்க இருக்கீங்க, ஏன் என்ன விட்டு போனீங்க.. உங்களக்கு ஏன் அவ்ளோ அவசரம் அப்பா... என்று கதறி கொண்டே அழ... சிறிது நேரத்தில், தன்னை மறந்து அப்பாவின் புகைப்படத்தோடு தூங்கி போனால் மீனா...
அதிகாலை, எழுந்தவுடன் வேகமாக தனது அப்பா எழுதிய டைரி யை, அலமாரி, பரண் மேல உள்ள சில அட்டைப்பெட்டிகள், பீரோ எல்லாம் கலைக்கப்பட்டது... எங்கும் கிடைக்க வில்லை..மீனா தனக்குள்ளே பேசி கொண்டால், அப்பா ப்ளீஸ் அப்பா எங்க இருக்கு, help பண்ணுங்க அப்பா, இங்கதான் எங்கேயோ நீங்க இருக்கீங்க, இத்தனை வருஷமா தெரியாம உங்கள தொலைச்சுட்டேன் என்று சொல்லி கொண்டே தேடி கொண்டு இருந்தால்... இதை எல்லாம், எதுவும் பேசாமல் மீனாவின் அம்மா, அமைதியாக மீனாவை பார்த்து கொண்டே இருந்தால்..
ஒரு அட்டைப்பெட்டியின் அடியில், டைரி கையில் தென்பட்டது, வேகமாக அதை கீழே இருக்க மிகவும் கஷ்டப்பட்டு, தடுமாறி கீழே விழுந்தால் மீனா.. கையிலும், காலிலும் சிறு காயம்..வலி தெரியவில்லை.. அம்மா தூக்கி விட ஓடிவந்தாள்.. கையை தட்டிவிட்டு, அறை கதவு திறந்திருந்தும் படார் என்று கை அதில் அடிக்க வேகமாக அடுப்படி சென்று, கத்திரிக்கோலை எடுத்து வந்து அந்த பெட்டியை சணல் கயிறை பிரித்து உள்ளே இருந்து அந்த டைரி எடுக்க பட்டது..
அதில், கடையில் இருந்த அப்பாவுக்கு என்னாச்சு என்ற தொடக்கம் இருந்தது..
நான் சற்றே தடுமாறி நிற்க, மீனாவின் தோழி, அங்கிள் நீங்க மீனா அப்பாவா, ஆமா கண்ணு, நீங்க ? நானும் மீனாவும் friends அங்கிள். மெதுவாக, என்னை கீழே அழைத்து, காதருகே அங்கிள், அப்பா சாக்லேட் வாங்கி தரமாட்டாரு, நீங்க எனக்கு gift சொல்லி, வாங்கி தாங்க ப்ளீஸ் அங்கிள். எனக்கு அந்த பிங்க் lollypop ரொம்ப பிடிக்கும்.. எனக்கு என்ன செய்ய தெரியவில்லை.. கண்டிப்பாட.. குழந்தைகள் கிட்ட மட்டும் இல்லை என்று சொல்ல, மனம் ஏதோ தடுக்கிறது...
அண்ணாச்சி, அந்த பிங்க் lollypop ஒன்னு தாங்க..முதல நீங்க காசு தாங்க.. அது அஞ்சு ரூபா, மீனாவின் தோழியும், அவள் அப்பாவும் ஒருபோல் என்னை பார்க்க.. நான் சிரித்து கொண்டே, அண்ணாச்சி பணம் இல்லாம எவானது கடைக்கு வருவானா.. எல்லாம் இருக்கு... முதல கொடுங்க..
எல்லாரும் வரமாட்டாங்க, நீங்க வருவீங்க என்று சற்றே கடிந்து கொள்ள..
கையில் இருந்த இருபதை கொடுக்க.. சற்றும் யோசிக்காமல்... அந்த கடைக்காரர்..
இதற்கு பிறகு மீனாவால் படிக்க முடியவில்லை.. அவள் குழந்தையில், கையில் சிறு பேனாவும், கலர் கலர் பென்சில் வைத்து மிச்ச பகுதியை முழுதும் கிறுக்க பட்டுயிருந்தது.. இப்போது கிறுக்கல், அப்போது அப்பாவிற்கும் இது மிக பெரிய ஓவியம்..
அவள் மீதே, மிகவும் கோவம் கொண்ட மீனா, அந்த டைரி யை தூக்கி எரிய, அதில் இருந்து சில லெட்டர் விழுந்தது.. அதை கண்டதும், அப்பாவின் நினைவும், அந்த கதறலும் வீட்டை ரெண்டாகியது..
காரணம்...
(தொடரும்)
அப்பாவின் நினைவுகளோடு மீனா..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
27 Jun 2020
Single Tea
This is a real story that happened 10 years back, and thought of sharing now.The one and only person working on time is our office tea boy..Sharp 10:3...
07 Jul 2021
My Dear பொம்மை - விளையாட்டின...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்மீனாவின் சத்தத்தை கேட்...