Kalyan day by day your writing is becoming more philosophical! You have become a master in writing! Keep on writing Kalyan! Very soon you will become an inspirational writer! Who knows a future director as well! Rock on Kalyan 🤘
எதிர்பாராததை எதிர்பாருங்கள்
By Admin - 14 Sep 2021 1073 1

எதிர்பார்ப்பு - உண்மையிலே, எதிர்பார்த்தா என்னவாகும் ?
எதிர்பார்த்தது நடந்தால் சந்தோஷம். நடக்கலைனா அது நமக்கு வருத்தம். அதன்
தொடர்ச்சியாக வன்மம், துக்கம், அழுகை, பொறாமை, கோபம், வெறுப்பு, தனிமை,
பல விதமான உணர்ச்சி கலக்கம் நம்முளே வந்துப் போகும். ஒரு வேளை,
எதிர்பார்த்தது நடக்காமல் போனால், அது நமக்கு வருத்தம்.. ஆனால், நம்முடைய
தோல்வி அடுத்தவனுக்கு வெற்றி, அப்போ அவனோட எதிர்பார்ப்புக்கு கிடைத்தது
சந்தோசம். வெற்றியும், தோல்வியும் ஒட்டி பிறந்தவர்கள்.. ஒன்று வாங்கினால்,
மற்றொன்று கூடவே தொடர்ந்து வரும்.. நமக்கு, நடக்கின்ற எல்லா நிகழ்விலும்,
நாம் எதிர்பார்க்கிறது நடக்கவும், நடக்காமையும் போகும்.. ஆனால், எதிர்பார்ப்பு
இருந்து கொண்டே இருக்கும். எதிர்பார்ப்பு வாழ்க்கை நகர்த்துவதற்கான
எரிபொருள்.
பசியில் நடக்கும் பொழுது, கீழே நூறு ரூபாய் பணம் கிடைத்தால், அது
எதிர்பார்க்காத சந்தோசம், அதுவே, கீழே நூறு ரூபா கிடைச்சா நல்லா இருக்கும்,
பசிக்குதே அப்படின்னு போகின்ற பொழுது, ஒரு ரூபா கூட கிடைக்காது. அது
இந்த ஆழ் மனதின் திருவிளையாடல்... எதிர்பார்த்து போனால் எல்லாம் சமயமும்
எல்லாம் கிடைக்கும் என்று அவசியம் இல்லை. எதிர்பார்க்காமல் போனால்
எல்லாம் கிடைக்கும் என்று நிச்சயமும் இல்லை.. ஆனால், எதிர்பார்க்காத
மனிதனே இந்த உலகத்தில் இல்லை..Expectation kills என்ற வார்த்தை சொன்ன
அந்தப் பெயர் தெரியாத அறிஞனின் எதிர்பார்ப்பே, யாரும் எதிர்பார்க்காதீங்க என்று
சொல்வது தான்..
கோவிலுக்குப் போகின்றோம், இறைவனுக்கு நன்றி சொல்ல யார் போகிறார்கள்.
எதிர்பார்ப்பே இல்லாமல் கோவிலுக்குப் போகின்ற ஒரு ஆள் இந்த உலகத்தில்
இல்லை. கடவுள் நம்பிக்கை எப்பொழுது வரும் ? பணக் கஷ்டம், குடும்ப கஷ்டம்,
உடம்பு சரியில்லை, விபத்தில் சிக்கிய தருணம், குழந்தை வரும் நேரம், வராத
நேரம், சாகப் போகும் அந்த நொடி...எல்லாம் சரியாகணும் என்கின்ற ஆசையும்
தாண்டி, எதிர்பார்ப்போட தான் போகிறார்கள். பிச்சை எடுக்கின்ற பல மனிதர்களின்
எதிர்பார்ப்பே, வெளியே வரும் பொழுது, கடைக்கண்கள் தன் தட்டை மட்டும்
காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு..
இவ்வளவு ஏன் ?
நிலவை காட்டிக் கொண்டே சோறு ஊட்டுகின்ற அம்மா, அந்தக் குழந்தையிடம்
சொல்கின்ற கதை, அந்த குழந்தைக்கு எதிர்பார்ப்பு தான் அந்த நிலவிடம்.
குறைகள் சொல்ல வரும் சொந்தங்கள், எங்க அக்காப் பையன் நாளே மாசத்துல
ABCD சொல்லறான், ஸ்லோகம் சொல்லறான், பாட்டு பாடறான்..அதுவும்
இங்கிலிஷ் பாட்டு....ஆமா, உங்க பொண்ணுக்கு என்ன வயசாச்சு ? அப்படின்னு
சொல்லி, அப்பொழுதுதான் அம்மா சொன்ன குழந்தையிடம் போய் நீ ABCD
சொல்லுன்னு எதிர்பார்க்கின்ற உலகம்.. சிலப் பெற்றோர்கள், தனக்காக
இல்லாமல்..
சமூகத்திலும், சில உறவிடம் பெருமை காட்டி கொள்வதற்காக, குழந்தைகள்
என்ன படிக்க வேண்டும் என்பதை மறந்து, எங்கே படிக்க வேண்டும் என்ற
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்கள்..
குழந்தைகளுக்கு, நிறையா அன்பு வேணும், கூடவே எப்பொழுதும் விளையாடனும்
எதிர்பார்ப்பு, ஸ்கூல் பசங்களுக்கு, மழை வரணும் எதிர்பார்ப்பு. முதல் மார்க்
வாங்கற பசங்களுக்கு முதல் மார்க் தான் வரணும் எதிர்பார்ப்பு, தோல்வி
ஆகுறவனுக்கு, ஜஸ்ட் பாஸ் ஆனா போதும்னு எதிர்பார்ப்பு, காலேஜ் பசங்களுக்கு
பிடித்தப் பொண்ணு வரணும் எதிர்பார்ப்பு, மெக்கானிக்கல் பசங்களுக்கு ஒரு
பொன்னாவது வராதான்னு எதிர்பார்ப்பு, காதல் சொல்கின்ற பொழுது,
ஏத்துக்கனனும் எதிர்பார்ப்பு. கடைசி வரைக்கும் நம்பள மட்டும் தான் காதல்
பண்ணனும் நினைக்கறது கூட எதிர்பார்ப்பு.
போகின்ற வேலை கிடைக்கும்னு எதிர்பார்ப்பு. வேளைக்கு போறப்போ சம்பளம்
வரணும் எதிர்பார்ப்பு. வீடு முதலாளிக்கு, வாடகை சரியா வருமான்னு எதிர்பார்ப்பு.
அம்மா, அப்பாக்கு நாம சொல்கின்ற பெண்ணை, பையனை கல்யாணம்
பண்ணனும் எதிர்பார்ப்பு. கடன் தருகின்றவனுக்கு, இவன் தருவானானு தரும்
வரைக்கும் எதிர்பார்ப்பு. கடன் கேட்கின்ற பொழுது, இவங்க கிட்ட கேட்டா
தருவாங்களானு எதிர்பார்ப்பு. வேலை செஞ்சா, வாடிக்கையாளர் பணம்
தருவானானு எதிர்பார்ப்பு, ஆனா, வாடிக்கையாளர்க்கு, கொடுத்த காசுக்கு வேலை
செஞ்சு தருவாங்களானு எதிர்பார்ப்பு. பொண்ணு தரவங்க, நம்ம பொண்ண நல்லா
பார்த்துக்கணும் எதிர்பார்ப்பு, வருகின்ற பெண் நம்ம குடும்பத்தை நல்லா
பார்த்துக்கணும் பையனோட எதிர்பார்ப்பு.
திருடனுக்கு, மாட்டிக்கொள்ளாமல் திருடனும் எதிர்பார்ப்பு, போலீஸ்க்கு திருடன்
மாட்டனும் எதிர்பார்ப்பு. மக்களுக்கு நல்ல தலைவன் வேணும் எதிர்பார்ப்பு,
தலைவனுக்கு, கேள்வி கேட்காத எதிர்க்கட்சியும், மக்களும் வேண்டும் எதிர்பார்ப்பு.
கடையில் வாங்குகின்ற பொருள் நல்லா இருக்குமா ? என்று நினைத்துக்
கொண்டே எப்பொழுதும் ஒரே கடையில் வாங்குவது கூட நம் எதிர்பார்ப்பு..
சாப்பிடும் பொழுது, நல்லா சாப்பிடனும் எதிர்பார்ப்பு. உள்ளே செல்கின்ற சாப்பாடு,
நல்லா செரிமானம் ஆகணும் எதிர்பார்ப்பு. கல்யாணம் ஆச்சுன்னா குழந்தைக்கு
எதிர்பார்ப்பு, அதே குழந்தை எப்பொழுது வளரும்னு எதிர்பார்ப்பு. வளர்ந்தா,
மறுபடியும் குழந்தையா ஆகாதுன்னு எதிர்பார்ப்பு. அதுவே, குழந்தை இல்லை
என்றால், ஒன்றாவது கிடைக்காத என்ற எதிர்பார்ப்பு.. வந்தாலும், ஏங்காத மனம்,
மீண்டும் அதையே தேடுகின்ற எதிர்பார்ப்பு.. கல்யாணம் ஆகாதவனுக்கு,
ஆகணும்னு எதிர்பார்ப்பு.. ஆனவனுக்கு, சமாளிச்சாப்போதும்னு எதிர்பார்ப்பு. இது
விசித்தரமான கோட்டை.. உள்ளே இருப்பவன், வெளியே செல்ல துடிப்பான்,
வெளியே இருப்பவன் உள்ளே செல்ல ஏங்குவான்…
ஒரு வேளை தேநீர் குடிச்சவனுக்கு, ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத என்ற
எதிர்பார்ப்பு.. ஒரு வேளை சாப்பிட்டவனுக்கு, தேநீர் மட்டுமே போதுமே என்ற
எதிர்பார்ப்பு... சிலருக்கு, சிலர் நல்லா இருக்கணும்னு எதிர்பார்ப்பு, சிலருக்கு சிலர்
நல்லா இருக்கக்கூடாதுனு எதிர்பார்ப்பு. சொத்துப் பிரிச்சா, நமக்கு எவ்ளோ
தேறும்னு நினைக்கறது ஒரு எதிர்பார்ப்பு.
உடம்பு முடியாமல் கடைசி நொடியில் படுத்துவிட்டால், எப்பொழுது
சாகப்போறோம்னு எதிர்பார்ப்பு, அந்த நொடி வருகின்ற பொழுது சாகக் கூடாது
நான் வாழனும் எதிர்பார்ப்பு. செத்துப் போனால், இவங்க திரும்ப இதே வீட்டில்
பிறக்கணும் ஆசைப்படுவது கூட ஒரு எதிர்பார்ப்பு. இல்லை என்றால், அதன் ஆவி,
சாந்தி அடையனும் எதிர்பார்ப்பு. அந்த ஆவி மேலோகத்தில், எப்ப நான் திரும்ப
பிறப்பேன் என்று இறைவனிடம் கேட்பது ஒரு எதிர்பார்ப்பு
ஆக மொத்தம், பிறந்தாலும் எதிர்பார்ப்பு, வாழ்ந்தாலும் எதிர்பார்ப்பு, இறந்தாலும்
எதிர்பார்ப்பு. இறந்த பிறகும் எதிர்பார்ப்பு. வாழ்க்கையோட சுவாரஸ்யமே, அடுத்த
நொடி என்னவென்று அறியாமல், எதிர்பார்த்து காத்துக்கொண்டே இருப்பது.
ஆனால், யாரவது கேட்டால், நான் எதிர்பார்கலையே அப்படி சொல்லி,
எதிர்பார்க்கறது தான்..
எதிர்பார்த்துக் கிட்டே இருந்தா, எதுவும் நடக்காது. எதிர்பார்க்காமலே இருந்தாலும்
நடக்கின்றதை நிறுத்த முடியாது. அதனால், நம்ம வேலைய உண்மையா,
எதிர்பார்ப்போட செஞ்சுக்கிட்டே இருப்போம், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள், அது தான் வாழ்க்கை.
இப்போ இதை எழுதறது கூட ஒரு எதிர்பார்ப்போட தான்..
எதிர்பார்ப்பு வாழ்க்கைக்கு எரிபொருள்
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
See More Stories
28 Jun 2020
What if TEA is your best frien...
Tea - is not just a word, it's life. Single tea solves problems, helps for thought provoking ideas.It also helps in making friendship, making love, gi...
11 May 2024
மலர்களே மலர்களே...
மலர்களே மலர்களேஅழுகை வேண்டாம்...வாடினால் வாடினால்உதிர வேண்டாம்..காலங்கள் கூடிவருமே,ஒதுங்க வேண்டாம் - உன்சிரிப்பிலே துளிர் விடுவாய்கலங்க வேண்டாம்....வர...
11 Sep 2022
வெள்ளை
சில நொடிகள் இமைக்காமல்,கடிகாரத்தின் முட்கள் நகர்வதை பார்க்கும் பொழுது காலத்தில் வேகத்தை கண்டு பயம் தொற்றி கொண்டது.....