படித்தவுடன் கிழித்துவிடவும்
By Admin - 19 Sep 2021 883 0

கற்கை நன்றே, கற்கை நன்றே,
பிச்சை புகினும், கற்கை நன்றே..
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை,
எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்..
உண்மையில், இது போல் வரிகளும், தத்துவங்கள் ? வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது..
இவ்வளவு, ஆழமான வரிகள் இருந்தும்,
அதன் அர்த்தம் அறிந்தும்,
ஒரு குட்டையில், நீந்துவது ஏன் ?
அறிவியல் சொல்வது போல், அனைவரின் வாழ்வும் என்றோ தீர்மானிக்க பட்டதா, அதை எழுதியவன் எவன் ? எங்கோ இருக்கும் கிரஹங்கள், கண்ணனுக்கு தெரியாது ஒரு காந்த அலை, நம்மை ஆட்டிவைக்கும் சக்தி எப்படி கிடைத்தது.. அது தான் கடவுளோ ?
எவனும், பிச்சை எடுத்து படிக்க விரும்பவில்லை,
எடுக்கும் பிச்சையில் பங்கு எடுக்க கூட்டம் குறைவில்லை..
பணம் இருந்தும், இல்லாதவனும் - அரை விழுக்காடுகள் ஒரு அல்லது இரு வேலை உணவில் மட்டும் பொழப்பு ஓடுகிறது, என்னையும் சேர்த்து.. பாதி உயிர் தேநீரால் மட்டும் வாழ்கிறது.. அப்படி இருக்க, தனி ஒருவனுக்கு உணவு எப்போதும் கிடைப்பதில்லை.. பாரதி கண்டது ஒரு கனவோ ?
வள்ளுவனும், பாரதியும் சொன்னது வாழ்வியல், அது அவர்களது கற்பனையும், கனவும், அனுபவவும். ஆனால், தத்துவங்களும், வேதங்களும், உபன்யாசங்களும், குறள்களும் படித்து எவனும் வாழ கற்றுக்கொள்ளவில்லை. இலவச அறிவுரை, மூளையும் அதில் இருக்கும் ரசாயன கூறுகளும் ஏற்காது, அது மனித வாழ்வின் வடிவமைப்பு. நானும் மனிதன், ஏலியன் அல்ல.. எனக்கும் இது பொருந்தும். பல படித்தும், கேள்வி பட்டும், படம் பார்த்தும் ஒன்றும் கற்கவில்லை.. தினம் ஒரு பாடம், நொடி வித்தியாசத்தில் கற்று தருகிறது., இருந்தும், இந்த வாழ்விற்கு நாம் குழந்தை போல, செய்த தவறையே, மீண்டும் செய்ய தோன்றுகிறது ? திருட்டு பால் ருசித்த பூனை கதை போலே..
ஒரு முறை செய்யும் பொழுது அறியாமை, மீண்டும் மீண்டும் செய்யும் பொழுது தவறு, ஆனால் மூளை கூறுகள், இது நம் விதி என்று நம்ப வைத்து, நம்மையும் சமாதானம் செய்யும்.
அதனால் என்னவோ, திட்டும் பொழுது, மண்ணாங்கட்டி என்ற வார்த்தை புழக்கத்தில் வந்திருக்க கூடும்.. மானம் அல்ல, தன்மானம் கெட்ட மூளை. ரசாயனங்களை நொடிக்கு நொடி மாற்றி கொண்டே இருக்கும்.. நிலை யற்ற ஒரு கிறுக்கன்.
நம் வாழ்வின் அழகே, தப்பையும், ஒரு நாணயமாக செய்வது. சிலர்க்கு நாம் உண்மையாக இருக்க, பலருக்கு துரோகி ஆகிறோம். தெரிந்தும், தெரியாமலே..பேசும் பேச்சில், உண்மை எது, பொய் எது என்று கண்டுபிடிக்க ஒரு யுகமே தேவைப்படும். உண்மை போலே இருக்கும், அதில் பொய் மட்டும் தான் நிலைக்கும்.. பொய் போல் தெரியும், ஆனால், அது உண்மையை உரக்க சொல்லும்..
அடுத்தவர்களுக்கு, நீதிபதியாகவும், தனக்கு வக்கீலாகவும் மாற்றி கொண்டவன் தான் மனிதன். நல்லவன் யார் ? கெட்டவன் யார் ? ஏன் இந்த பாகு பாடு. எதை வைத்து இந்த பிரிவினை..நீண்ட சிந்தனைக்கு பிறகு, என் சிறு மூளைக்கு எட்டியது ஒரு உதாரணம்..
நம்மை போலவே சிந்தனையிலும், சொல்வதை கேட்டு அசல் மாறாமல், செயலையும் யார் ஒற்றி செய்கிறார்களோ அவர்கள் நாம் பார்வையில் நல்லவர்கள், எதிர் குரல் வந்தால் அவர்கள் கெட்டவர்கள். ஆனால், அந்த எதிர் குரலுக்கு யார் ஒற்றி வருகிறார்களோ, அவர்கள் பார்வையில் இவர்கள் நல்லவர்கள். சிலர்க்கு நம்மை பிடிக்கும், சிலர்க்கு நம்மை பிடிக்காது, காரணம் தோற்றம் அல்ல, எண்ணங்களின் சேர்க்கை, அது இருவர்க்கும் உள்ள காந்த சக்தி போல். ஈர்ப்பு, சிறிதாக இருந்தால் ஓட்டுவது கடினம் அவர்கள் கெட்டவர்கள், அதே ஈர்ப்பு, சிலர்க்கு ஒட்டிக்கொள்ளும் சக்தியாக பாரும், அவர்களுக்கு இவர்கள் நல்லவர்கள்.
என்னை பிடிக்காதவர்கள் பல, என்னை பிடித்தவர்களும் பல..என்னை பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் அவர்களுக்குள் பிடித்தவர்கள் ஆகலாம். அது, அவர்களின் எண்ணங்கள், செயலை பொறுத்து. ஆகமொத்தம், எனக்குள் தூங்கி கொண்டு இருக்கும் மிருகம், சாந்தமாக விளையாட செய்யும், ரௌத்திரமும் செய்யும்.. அது சூழ்நிலை, சுற்றி உள்ள மனிதர்கள், அந்த நேரத்தில் அரங்கேறும் நாடங்களை பொறுத்து.
தத்துவங்கள் எல்லாம் வாழ்வியலில் செயல் பட தொடங்கினால், கடவுளுக்கும், கர்மாவுக்கும் ஒய்வு வந்துவிடும். அடுத்தவர்களின் ஒய்வு, மனிதனுக்கு பிடிக்காது, காரணம் அது மனித குலத்தின் வடிவமைப்பு.
ஏனெனில், இந்த தத்துவங்கள் எல்லாம், படிக்க மட்டும். செயல்பாட்டுக்கு இல்லை..
படித்தவுடன் கிழித்துவிடவும்..
இப்படிக்கு,
ஏற்கனவே பல முறை கிழித்த,
கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
28 Jun 2020
What if TEA is your best frien...
Tea - is not just a word, it's life. Single tea solves problems, helps for thought provoking ideas.It also helps in making friendship, making love, gi...
09 Jun 2025
ஏக்கம்
பல வண்டிகள் மாறி வந்து நின்ற அப்பாவை காணாதக் கூட்டம், ஏனோ சற்றும் முன் காரில் வந்த உறவை ஏன் கொண்டாடுகிறது,என்று ஏக்கத்தோடு பார்த்...
24 Jan 2025
வீரத்தின் மொழி...
மண்ணின் பாய்ச்சலிலே, புழுதியாய் புறப்பட்டு, காளையே! காளையை நீ அரவணைத்துக்கொள், வீரத்தின் இரகசிய மொழி அன்பு, பேசிவிட்டு, பத்திரமாய் வீடு...