மலர்களே மலர்களே
By Admin - 11 May 2024 700 0

மலர்களே மலர்களே
அழுகை வேண்டாம்...
வாடினால் வாடினால்
உதிர வேண்டாம்..
காலங்கள் கூடிவருமே,
ஒதுங்க வேண்டாம் - உன்
சிரிப்பிலே துளிர் விடுவாய்
கலங்க வேண்டாம்....
வருவதும், போவதும்
இயற்கையே - இதில்
நீயென்ன நானென்ன..
இந்த நொடியே,
இமைக்காமல் நீயே,
பார்த்திடு - உனக்கென்ன
நாள் வருமே நிமிர்ந்திடு...
தடங்கல் தடையுமும்,
பாதை மறுக்குமே - நீயே
எல்லாம் என்று மலர்வாயே...
போகும் பாதையும்
தூரமில்லையே - முட்களும்
நீண்ட வலியில்லையே...
விழியிலே ஈரம் வேண்டாம்,
வழியெல்லாம் பூக்களே,
வந்துவிட்டால் - நீ மேலே
வந்துவிட்டால் - போனதும்
உன்னை தேடுமே...
உனக்கான நேரம் வருமே...
- கல்யாணராமன் நாகராஜன்
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
05 Sep 2020
தெரிந்த கதை !!!...
உன் அப்பாவின், செருப்பின் தையலுக்கு மட்டும் தெரிந்த கதை - உன் புது செருப்பின் எண்ணிக்கை !!!...
09 Feb 2020
பிஞ்சு முகம் !!!...
பிஞ்சு முகம் வாட,பால் வாங்க இருபது ருபாய் ; பசியில் அழுகை வீட்டை மட்டுமில்லை - என்உயிரையும் இரண்டாகியது..உண்டில் உடைக்கப்பட்டது - ஏனோ,மறந்து போனேன் அத...
30 Mar 2024
எல்லாம் அவன் செயல்...
ஹைக்கூ...இரத்த வெள்ளத்தில் கடைசி நிமிடம் - நான்;அடிபட்ட லாரியின்,நெற்றியில் "எல்லாம் அவன் செயல்"...