Superb kalyan
மீனாவும் Middleclass அப்பாவும் பாடம் 1
By Admin - 09 Jun 2021 1129 1

கதைக்களம் - ஆரம்பம் - 1
ஒரு நடுத்தர குடும்பம், தன் செல்ல மகள் ஐந்து வயது மீனாவிற்கு, அப்பா வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தாலும், No என்று சொல்லாமல், முடிந்தவரை ஐம்பது ரூபாய்க்கு என்ன முடியுமோ அதை வாங்கி தருவார்..
ஒரு நாள், மீனா டிவி யில் முட்டை பார்த்துவிட, அப்பா சற்றும் யோசிக்காமல், உண்டியல் ஒரு குலுக்கு குலுக்கி ஒரு பத்து ரூபாய் தேற்றிக்கொண்டு, கடைக்கு செல்ல புறப்பட்டார். உடனே, உள்ளிருந்து ஒரு குரல் மட்டும், உண்டியல் சத்தம் கேட்டுச்சு... அதுல இருக்கறதே இருபது ரூபா, பால் வாங்கவே நாலு ரூபா இல்ல..நீங்க எங்க போறீங்க என்று சற்று கடிந்து கொண்டாள்.. சமையல் அறையில் இருந்து வெறும் பேச்சு மட்டும் வந்தது.. சற்றும் யோசிக்காமல், பால் வாங்க போறேன்..
உடனே மீனா, அப்பா எனக்கு lollypop வேணும், அதுவும் பிங்க் கலர் தான் வேணும்.. கண்டிப்பாடா.. கையில் இருபது ரூபா - என்ன செய்யவது ஒரு அப்பாவாக.. பால் வாங்கவா, முட்டை வாங்கவா, pink lolly pop வாங்கறதா... எதுவும் யோசிக்காமல், சட்டென்று ஒரு முடிவு எடுத்தேன்.. முதலில் செப்பல் போடுவோம் என்று...
மளிகை கடை வெறும் 10 நொடிகள், ஆனால் என் சிந்தனைக்கும், காலுக்கும் பல மயில் தூரம்.. பொறுமைக்கே கோவம் வருவது போல், மிக பொறுமையாக நடந்தேன்..
ஆனால், அங்கே கண்டே ஒரு சம்பவம்.. என் வாழ்க்கையும், எண்ணத்தையும் மாற்றிவிட்டது..
அங்க என்ன ஆச்சுன்னா..
தொடரும்...
(இன்னும் கொஞ்சம் நேரத்துல கடைக்கு வந்துரலாம்...)
Add Your Comments
Say Something
Comments
See More Stories
17 May 2024
என் கவிதையும், பரிசும்......
இறைவனுக்கு நன்றி, தமிழுக்கு நன்றி, குடும்பத்திற்கு நன்றி, நண்பனுக்கு நன்றி.பல வருடங்கள் கடந்து வந்த முயற்சியும், மொழி காதலும்... என்னை ...
27 Jun 2020
கண்கள் நீயே......
கண்கள் நீயே,காதலும் நீயே,என் விழிகளில் வழியும் ஜீவனும் நீயே...உயிரும் நீயே,உறவும் நீயே,என் உதிரத்தில் கலந்தஉருவமும் நீயே...அடி..வாழ்கின்ற நொடியேஉ...
03 Mar 2024
அம்மா
அவ்வும் நீ,அகாரமும் நீ,அருவியின் ஓசை நீ,காற்றின் ஒலியும் நீ,வேதங்கள் ஓதும், நாதமும் நீ,யாகங்கள் தரும் சாம்பலும் நீ,அன்பில் தெரியும் உருவமும் நீ,ரௌத்தி...