very nice starting
முத்துகாளையும், பருத்தியம்மாளும் கதை தொடக்கம் !!!
By Admin - 17 Jun 2021 1047 1

அழகான ஒரு கிராமம், சுத்தி எங்கேயும் நிறைய மலைகள், வயல்கள், பெரிய தோப்பு, வழி எங்கும் மரங்கள், அங்கே அங்கே சில குளங்கள், குட்டைகள், எப்போதும் வீசும் ஜில்லென்ற காற்று, மொத்தமாக இருநூறு வீடுகள், பஞ்சாயத்து ஆலமரங்கள், தெரு எங்கும் நிம்மதியாக சுற்றி தெரியும் ஆடு, மாடு, கோழி அதனுடன் விளையாட சில சின் வண்டுகள், மண் தரையிலும், சேற்றிலும் தவழும் பிஞ்சுகள், பாரபக்ஷம் இன்றி வளரும் குழந்தைகள், நேரில் யாரை கண்டாலும், நல்ல இருக்கீங்களா, வூட்டுல எப்படி இருக்காங்க, சாப்டீங்களா என்று நலம் விசாரிக்கும் நெஞ்சங்கள், வன்மம் என்ற சொல் மறந்த அந்த அழகிய கிராமம் மதுராந்தகம் பக்கத்துல இருக்கற "நல்லமூர்". ஊர் பேர் மட்டும் இல்ல, அங்க இருக்கற எல்லாரும் அப்படித்தான்..
இந்த அழகான ஊர்ல, பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, கல்யாணம் பண்ணிக்கிட்டு, புள்ள பெத்துக்கிட்டு, பேரன், பேத்தி எடுத்தி சந்தோஷமா வாழற எழுபது வயது நெருங்கும் ஆதர்ஷ தம்பதி முத்துகாளையும், பருத்தியம்மாளும்..விவசாயம் செஞ்சு, சில வீட்டுல பாத்திரம் கழுவி, ரெண்டு வேலை மட்டும் சாப்பிட்டுக்கிட்டு, வர காசுல கொஞ்சமா கொஞ்சமா சேர்த்து வெச்சு புள்ளகுட்டிகளை படிக்கச் வெச்சு, பட்டணத்துல வேளைக்கு அனுப்பறதுக்கு அம்பது வருஷம் ஓடி போச்சு... திரும்பி பார்த்த, இவங்களோட பாதி வாழ்க்கை, இவர்களுக்காக இல்லாம புள்ளைங்க, பேரங்கனு போய்டுச்சு..
திடிர்னு, ஒரு நாள்... அதிகாலை ஒரு 4 மணி இருக்கும், பருத்தியம்மாள் ரொம்ப அசந்து தூங்கறப்போ, முத்துக்காளை மெதுவா அவங்க கிட்ட போய், ஏலே, கண்ணு, பருத்தி கண்ணு, எந்திருடா, எனக்கு ஒரு யோசனை.. வெகு நேரம் முயற்சி செய்தும் பலனில்லை.. அவளின், தலையை ரெண்டு ஆட்ட.. காலின் விரலை சொடுக்கு எடுக்க, என்னமோ செய்ய, பருத்தியம்மாள் எதற்கும் அசையவில்லை.. சற்றே, பயந்து போய். ஏலே, விளையாடாத.. இப்போதான் எனக்கு ஒரு யோசனை வந்துருக்கு இத்தனை வருஷத்துல..நீ பல நாளா சொல்ற அப்போ தெரில.. ஒழுங்கா எந்திரியா..என்ற சொல்லிக்கொண்டே யோசிக்காமல், சட்டென்று அருகில் சொம்பில் இருந்த தண்ணீரை எடுத்த அவள் மூஞ்சில் ஊற்ற, ஏதோ கெட்ட கனா கண்டது போல், தூக்கி வாரி போட்டு கொண்டு பருத்தி எந்திரிக்க, ஐயோ என்னாச்சு !!!
முத்துக்காளை அப்பாடா என்று பெரு மூச்சு விட..கொஞ்ச நேரத்துல அடி வயிறு கலங்கிடிச்சு...
தலையில் இருந்து, கழுத்து வரை முழுதும் தண்ணீர்..சற்றும் கோபிக்காத பருத்தி, என்னய்யா பசிக்குதா, எதுனா சாப்பிடறீங்களா..தோசை சுட்டு தரவா..அதெல்லாம் இல்ல பருத்தி, எனக்கு ஒரு யோசனை, இப்போவே, உடனே செய்ய போறோம் அத.
இந்த நேரத்துல, இப்படி எழுப்பி என்ன சொல்லப்போறீங்க
அது என்னனா..
(தொடரும்)
Add Your Comments
Say Something
Comments
See More Stories
03 May 2020
உலகின் மொழி தமிழ் !!!...
கடந்த சில மாதங்களாக, உலகம் பிறந்த நொடியில் பிறந்த எம் தமிழ் மொழியின் சிறப்பை கண்டறிய, பல தேடல்கள் தேவைப்பட்டது.. சங்ககால இலக்கியம், படிக்கமட்டுமல...
06 Dec 2021
மறைக்காதடி, மறுக்காதடி...
காலங்கள் மாறும்,திசைகள் நான்கும்,தொலைந்து போவோமேநாமும்..உன் விறல் பிடித்துபோகும் தூரம்உலகின் நெடுந்தூரபயணம்..மறைக்காதடி,மறுக்காதடி - என்காதலை துர...
04 Aug 2021
ஓடி வா முருகா...
ஆறுமுகனே, அய்யனேஓடி வா செய்யோனே..மஹாசேனா, மகேசன் சேனா,கூட வா கந்தனே...ஓடி வா முகனே..தேடி தேடி, அருள் பெற,கண்டேன் உன்னையே,நீயே - குகனே,என்றும...