Beautiful story of most of the parents
முத்துகாளையும், பருத்தியம்மாளும் பயண தொடக்கம் !!!
By Admin - 22 Jun 2021 1081 2

---------
முத்துகாளையும், பருத்தியம்மாளும் பயண தொடக்கம் - 2
இத்தனை வருஷத்துல, கடமை, பொறுப்பு, பார்க்க கூடாத கஷ்டம்..எல்லாத்தையும் பார்த்தாச்சு.. ஹ்ம்ம்ம்.. பெரு மூச்சு விட்டுக்கொண்டே..ஏலே, பருத்தி, நீயும் நானும் கடமைக்காக நெறையா பார்த்தாச்சுயா, நம்ப வாழ்க்கைல திரும்பி பாக்கறப்போ மொத்தமும் நம்ம பசங்கள படிக்கச் வெச்சு, சோறு போட்டு, வேளைக்கு அனுப்பி, கல்யாணம் பண்ணி, பேர புள்ளைங்கள வளர்த்து தான் இருக்கு.. சேர்ந்து ஒரு வேளை சோறு கூட திங்க நேரமில்லை, நினைச்சாலும் முடியல..
பசங்களும், வேலை வேலைனு இருக்காங்க, அதுவும் ரெண்டு இல்ல மூணு நாளைக்கு ஒரு தடவ போன் பன்றாங்க.. நம்ப சாப்பிட்டோமா, தூங்குனமோ, உடம்பு நல்லாயிருக்கு கூட தெரியாது.. எல்லார்க்கும் ஒரு நிலைக்கு அப்பறம், அவங்க வாழ்க்கை, அங்க உள்ள சூழ்நிலை அப்டியே போகுது..
உனக்கு நினைவு இருக்க பருத்தி, போன வாரம் உனக்கு உடம்பு சரியில்ல, பார்த்துக்கவோ, என்னாச்சுன்னு கேட்கவோ நாதி இல்ல.. ஆனா, எல்லாரும் இருக்காங்க நமக்கு..
நம்ம செத்துட்டா கூட, ஒரு நாள் கண்ணீர் அவ்ளோதான்.. அடுத்த வேலைய பார்க்க எல்லாரும் போய்டுவாங்க.. அறுபது வருஷமா இவங்க, அவங்களுக்காக இல்லாம நமக்காக வாழ்த்தாங்க சொல்லி யாரும் சிலை வைக்கமாட்டாங்க...கடமையை செஞ்சோம், அத சந்தோஷமா செஞ்சோம்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம..எப்பவும், இப்பவும்...
ஒரு நாள், ஒரே ஒரு நாள் நமக்காக வாழ்வோம், நம்ம சந்தோஷத்துக்காக.. ஆறு மணிக்கு முத பஸ் வரும், ஏறி போவோம்.. எங்கன்னு தெரில...ஆனா போவோம்..இப்ப விட்ட இதுக்கு அப்பறம் எதுவும் நடக்காதோ அப்டினு பயமா இருக்கு பருத்தி.. போவோம், போய்ட்டு ராத்திரி வந்துடலாம் வீட்டுக்கு..
முத்து காளை பேச பேச, பருத்தி அம்மாள் கண்களில் வழிந்து ஓடும் காதலும், ஏக்கமும் கண்ணீராக.. அய்யா, ரெண்டு நிமிஷம்..நான் கிளம்புறேன் சாமி..நீங்க, சுகர் மாத்திரை மட்டும் எடுத்துக்கோங்க, அப்பறம் தண்ணி பாட்டில், கொஞ்சம் நொறுக்கு தீனி போற வழில சாப்பிட, போன் சார்ஜ் போடுங்க..அவள் பேச பேச, ஏலே, எதுவும் வேண்டாம் டா..நீ மட்டும் போதும்.. அடுத்த மொத்த நேரமும், நமக்காக.. எதுக்கும் இல்ல.. நீ கிளம்பு டா.. காபி குடிச்சுட்டு பஸ் ஏறுவோம்..
மனதுக்குள், சொல்ல முடியாத சந்தோசம்.. சில நொடிகள் இருபது வயது பெண்ணாக மாறியே போனால் பருத்தி அம்மாள்.. அனைத்தும் வேகம்.. வெறும் அஞ்சு நிமிஷம், புடவைய சுத்திகிட்டு வர, முத்தக்காளையும், ஒரு வேட்டி, சட்டை, தலைல ஒரு துண்டு...என்ன, போலாமா..ஹ்ம்ம் போலாம்..
இறுதி பயணமாக...
(தொடரும்)
Add Your Comments
Say Something
Comments
from Madhumitha at 2021-06-22 13:18:10
from Sivaraj Parameswaran at 2021-06-22 13:18:05
from Sivaraj Parameswaran at 2021-06-22 13:18:05
Sema super Kalyan! Waiting for the next episode! ❤️😀👍🏻
See More Stories
10 Jul 2025
நான் யார் ?
நான் யார் ?என் வாழ்க்கையில்,நான், ஒன்றும் எழுதப்படாத வெறும் காகிதம்..என்னை...கடந்தவர்கள், கடக்கின்றவர்கள், கடக்கப்போகிறவர்கள்காலம்...
25 Aug 2023
கனக சபாபதி
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்தநாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்வாழ்க ...
19 Apr 2023
தனிமை - ஒரு ஹைக்கூ...
அம்மா சுவையான சாப்பாடுபாத்திரத்தின் சத்தம் பானையின் முனகல் விளக்கு அணைந்ததுகோடை வெயில் உப்பு கரித்ததுஅடுக்குமாடி இருக்க உள்ளங்காலு...