காற்றாய் நானும் கரைந்தேனே
By Admin - 11 Jul 2020 871 0

என் கனவினில், கனவினில்
வந்து வந்து செல்கிறாய்
உன் நினைவுகள் - என்னை
தேடி தேடி கொல்லுதே
உன் கரு விழிகள் - என்னை
கண்டதும் இதயம் களவு போனதே,
நீ என்னை - கடந்து செல்கையில்
உலகம் மறந்து போனதே..
நம் இதயங்கள் பேசிட,
பரி பாஷை ஒன்றும் இல்லையே...
விழிகள் இரண்டும், தடம் மாறிட
வழிகள் ஏதும் இல்லையே
கண்களின் ஓரமாய்,
காதல் வந்த செல்ல...
செல்லமாய் உன்னை அழைத்திட,
வார்த்தை போதவில்லையே
இமைகளின் சிமிட்டலில்,
நானும் கரைந்து போக
காற்றிலே உன் கூந்தலும்
என்னை கடத்தி செல்ல
தேடினேன் தேடினேன்,
யாரடி என் காதலி - நீ
வந்ததும், கரைந்ததே
என் உயிர் துளிகளே
உன்னிடம் பேசிட,
நூறு கதைகள் உண்டு
அதை சொல்லிட,
கட்டிவைத்தேன் இரவையும்
உன் தோளிலே
நான் உறங்கிட,
தென்றல் என்னை தீண்டுதே
அது சென்ற தடயம் - உந்தன்
வாசம் வீசி போகுதே
உன்னை நான் சேர்ந்திட,
நாட்கள் தூரம் இல்லையே
அதுவரை காத்திருக்க,
என் நேரத்திற்கு
பொறுமை இல்லையே
என்னை நீ கண்டதும் - காற்றில்
என் விரல்கள் உன்னை தீண்டுதே
உன் சுவாசம் என்னை உரசிட,
காற்றாய் நானும் கரைந்தேனே..
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
07 Jun 2021
பரம ரகசியம்...
யாருக்கும் தெரியாது,தெரியவும் கூடாது - யென்றுநினைக்கும் பொழுதில்,தெரிந்து விடும் - ஒரு அதிசயம்கருவில் - அணுக்கள் உருவம் முதல் - நம்மைஇன்னுயி...
23 Jan 2023
அன்புள்ள அம்மா...
அன்புள்ள அம்மா,உன்போல் யாருமில்லையே.என்னை - உன்போல் யாரும்அழைத்ததில்லையே..நான் சொன்ன முதல்கவிதையும் நீ - நான் எழுதிய முதல் தமிழும் நீ...அடிசில், ...
11 Jul 2020
கடல் அலை....
நீரும் ஒரு அன்னைதான்ஆறுதல் சொல்ல,கட்டித்தழுவ,தனிமையில் - நிழல்துணைக்கூட யில்லாமல்,கால்கள் தனியே நடை பழகும்போது,மணல் வாசனையில்,தீண்டும் தென்றலாய்,...