பிஞ்சு முகம் !!!
By Admin - 09 Feb 2020 1248 0

பிஞ்சு முகம் வாட,
பால் வாங்க இருபது ருபாய் ;
பசியில் அழுகை வீட்டை மட்டுமில்லை - என்
உயிரையும் இரண்டாகியது..
உண்டில் உடைக்கப்பட்டது - ஏனோ,
மறந்து போனேன் அது சென்ற வார
கணக்கில் தீர்க்கப்பட்டது..
வீட்டின் அலமாரிகள் தடம் புரண்டது,
பல அறையகம் கலைக்கப்பட்டது,
அலைபேசியில் நண்பன் எண் தேடப்பட்டது,
இருந்தும் மணம் தடுத்தது - இருபது எப்படி கேட்பது ?
வாழ்ந்தவன் பணம் கேட்டால் - உதவி;
வாழ பணம் கேட்டால் - பிச்சை;
நான் என்ன ரகம் என்றறியாது - நின்றேன்...
நேரங்கள் நகர - அவள் குரலோடு,
பிஞ்சு அழுகையும் முட்டிக்கொண்டது..
சமாதானம் செய்யவும் - அறியாது
வார்த்தை தொற்றி கொண்டது - அப்பா
பால் வாங்க சென்றுவிட்டார்..
எவ்வழி என்று தெரியாது - எண்
வண்டி நகர்ந்தது - வேகம் தெரியவில்லை,
கடையில் கடன் சொல்ல - வார்த்தை வரவில்லை,
சற்றும் யோசிக்காமல் - நண்பன் வீட்டுக்கு பாதை மாறியது..
வண்டியின் வேகத்திற்கு தடையாய்,
போக்குவரத்து சமிக்ஞை - சற்றே நின்றேன்..
அருகில் ஏக வசனங்கள் - கோபத்தில் முகம்
மாற - ஒரு குரல்;
கை கால் நல்லாதானே இருக்குது,
ஏன் பிச்சை எடுக்கிறாய்;
யோசிக்காத பதில் - பால் வாங்க என்றால்;
கண்ணீரோடு கையில் பிஞ்சு குழந்தை அழுகை..
வெய்யிலின் சுளீர் - முகத்தில் அறைந்தால் போல்,
அந்த பதில் எனக்கும் சேர்த்தோ என்று தோன்றியது,
தனி மனிதனுக்கு - உணவில்லை என்றால் - இந்த
ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி;
குழந்தை எந்த வகை என்று தெரியவில்லை...
அரோஹரா - என்று பெரும் சத்தம்,
கற்சிலைக்கு நம்பிக்கையில் - பால்
அபிஷேகம் - அதில் விழும் சிறுதுளி
பால் அள்ளிக்கொள்ள ஓராயிரம்
பிஞ்சு முகங்கள் - அதில் ஏனோ
என் முகமும் !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
ஒற்றை பார்வை தீண்டலில்...
ஒற்றை பார்வை தீண்டலில்,என்னை என்ன செய்தாயோ,சின்னஞ்சிறு குறுநகையில்,புதுமொழி ஒன்றை தந்தாயோ..அன்பே, எனதுயிரே,நானாக நானில்லையே,உன்னை கண்டதும்,தாய்மொழி து...
28 Jul 2021
அப்பாவின் பக்கங்கள் !!!...
அப்பாவின் பக்கங்கள் !!!நடுத்தர குடும்பம், அப்பா சீரியஸாக டிவி பார்த்து கொண்டே, ச்சே, நம்பாளுங்க சொதப்புறாங்க, என்னத்த சொல்லறது... TV பாக்கவே கடுப்பா இ...
03 Sep 2022
தள்ளாடுதே, உன்னாலே......
கண்ஜாடை பேசினாள்,காற்றின் மொழிகள்கேட்குதே..வதனம் மெருகும்ஆகுதே - வெட்கங்கள்நூறானதே...பார்க்க பார்க்கபிடிக்குதே,பழகி பார்க்கஏங்குதே,உள்ளூறுதே,மனம்தள்ளா...