விடை தேடி சென்றேன்
By Admin - 11 Jul 2020 929 0

விடை தேடி சென்றேன்,
வாழ்க்கையின் கேள்விகளுக்கு !!!
தெரு எங்கும்,
திரிந்து, தெரிந்து,
கொண்டது,
தெரு நாய்களின்,
பரி பாஷைகள்
அலைந்து, அலைந்து,
ஓய்ந்து, தேயந்தது,
காலணிகள் மட்டுமல்ல,
என் கால அணிகளும்
இந்த சூழலில்,
பஞ்சம் என்பது,
பசிக்கு மட்டுமல்ல - என்
வியர்வைக்கு கூட;
ஏனோ
இரக்கம் இல்லை...
வறண்ட சூழல் மட்டும்,
காணும் திசை எங்கும்
எதிர்கால கனவுகளும்,
இறந்தகால சுமைகளும்,
ஒன்றாய் அரங்கேற்ற,
வெறும் கனவாகி போகிறது,
என் நிகழ்காலம்
காலங்கள் ஓடிவிடும்,
நாம் வாழ நினைத்த,
நொடிகள் எல்லாம்
என்றும் கற்பனையே !!!
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
04 Jul 2020
தாத்தா...
ஒரு கோடி நூலகத்துக்கு சமம்,என் தாத்தாவின் சின்னஞ்சிறு உரையாடல்..விடுமுறை நாட்களில், வேடந்தாங்கல் போல மாறியது;தாத்தாவின் வீடு..இதன் அருமை தெர...
07 Jul 2021
My Dear பொம்மை - விளையாட்டின...
My Dear பொம்மை - தொடக்கம்My Dear பொம்மை - இனிதான் ஆரம்பம்My Dear பொம்மை - விளையாட்டின் ஆரம்பம்மீனாவின் சத்தத்தை கேட்...
28 Aug 2021
ஓ ! ப்ரியா
இரவு 11 :30 மணி,ப்ரியா, தனது அபராட்மெண்ட்க்கு வந்ததும், பார்கிங்க்கு அருகில் உள்ள லிப்ட் பட்டன் அழுத்த சர்ர்ர்ர்ர் என்று லிப்ட் கீழே வந்தது. கதவு திறந...