நன்றி பகலவா !!!
By Admin - 19 Jan 2025 602 0

தைத் திங்கள் தழுவிய
தமிழ் மகளின் தாலாட்டலில்
ஈரைந்து மாதங்கள் சுமந்த,
மேகக் கூட்டத்தில் ஓரமாய்
ஒளிந்துக் கொண்டே
வெட்கத்தில் பிறந்தான் அந்த பகலவன்!
சில மதங்கள், பலப் பிரிவினைகள்,
ஓராயிரம் கண்டாலும் - வாழும் பூமியே
சூரியக் குடும்பம் தானே..?
ஆதியரே,
நிற்காமல் உன்னை சுழல்கிறோம் இன்றும்
நிலையானது, உன் ஒளியழகு,
தீயென, தேகத்தை சாய்த்தாலும்,
தலைவனே, உனது கருணை விழியால்,
நிலத்தில், மழையும் பெய்யும்...
மண்ணுக்கும், உனக்கும் உள்ள உரையாடல்,
என்றுமே இரகசியம்..
இயற்கையின் தகப்பன் அல்லவா நீ...
உன், ஒளியால் செழிக்கும் இந்த மண்ணில்,
புதுமைகள் மலரும், பசுமைகள் பரவும்,
அறுவடை இந்த,
நிலத்திற்கும், எங்கள் எண்ணத்திற்கும்..
நாளைய வாழ்வை, நம்பிக்கையுடன்
விதைக்கிறோம் நாங்கள் இன்று!
உன் ஒளியில்லாமல் வாழ்நிலம் வாழ முடியாது,
விளைச்சல் இல்லாமல் மனிதன் வாழ முடியாது!
வருடங்கள் கோடி கடந்துப்போனாலும்,
உனக்கு நன்றி சொல்லவே
மீண்டும் மீண்டும் பிறப்போம்,
எங்கள் ஆதவனே...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
14 Jun 2021
மீனாவும் MIDDLECLASS அப்பாவும்...
கதையின் முற்பகுதிக்கு செல்ல - பாடம் 1 - 3கதைக்களம் - ஆரம்பம் - 4சற்றென்று, மீனாவின் கண்களில் இருந்து, அடக்க முடியாத கண்ணீர் துளிகள்.. வார்த்தைகள...
13 Apr 2024
பாசம்
ஹைக்கூ....தாயிடம் பால் குடித்ததால்,தாயிடம் பாசம் இருந்தது...புட்டி பால் யென்று பிறந்ததோ,பாட்டில் மீது பாசம் வந்தது...- கல்யாணராமன் நாகராஜன்...
24 Jan 2025
வீரத்தின் மொழி...
மண்ணின் பாய்ச்சலிலே, புழுதியாய் புறப்பட்டு, காளையே! காளையை நீ அரவணைத்துக்கொள், வீரத்தின் இரகசிய மொழி அன்பு, பேசிவிட்டு, பத்திரமாய் வீடு...