My Dear பொம்மை இறுதி பயணம்
By Admin - 12 Jul 2021 1022 0

My Dear பொம்மை - இறுதி பயணம்
கார்த்திக், மீனா, அப்பா மூவரும் மெதுவாக, வெளியே சென்று, தேஜுவிடம் இருந்து, diana பொம்மை மட்டும் அங்கிருந்து எடுக்க முடிவெடுத்து... . தேஜுவிடம் விளையாடி கொண்டே, அந்த பொம்மையை கையில் எடுக்கும் பொழுது, அது டக்கென்று அவர் கை பிடித்ததும், பயத்தில் அலறி விட்டார்.. அனைவரும், தேஜுவையும் சேர்த்து எல்லாரும் ஒரு வினாடி நடுங்கி போனார்கள்.. கார்த்திக், diana வின் கையை, அப்பாவின் கையில் இருந்து எடுத்துவிட்டு, அதை ஒரு ஓரமாக தூக்கி எறியப்பட்டு, எல்லோரும், ஒரு மூலையில் வேகமா ஓடி சென்று உக்கார்ந்து கொண்டு, அடுத்து அது என்ன செய்ய போக போகிறது என்று அறியாது, அதையே பார்த்து கொன்டு இருந்தார்கள்..
அப்போதுதான், கார்த்திக் மிக பயந்தோடு, சாரி மீனா, சாரி அங்கிள். எல்லாத்தையும் சொன்ன நான், ஒரு உண்மைய மறைச்சுட்டேன், ஏன்னா, அது உண்மை தான் அப்படிகறந்து, இப்போதான் தெரியுது..எனக்கு வந்தது கனவு இல்ல, நிஜம்...என்னது ? என்ன சொல்லறீங்க. எங்களுக்கும் ஒன்னும் புரில... ஹ்ம்ம்ம்.. ஆமா மீனா, நான் கண்டது கனவு இல்ல, நிஜம்.. கொஞ்ச நாள் முன்னாடி, எனக்கு ஒரு கனவு, நான் ரோட்ல அழுது கிட்டே போற மாதிரி, எந்திரிச்சு ரொம்ப நேரம் ஆகியும், அது எனக்குள் ஓடிக்கிட்டே இருந்துச்சு..நான் ஏன் அழுகணும், அதுவும் ரோட்ல தனியா அழுகணும்... எனக்கு புரியவே வில்லை.. அப்படியே, கொஞ்ச நாள் போச்சு..ஆனா, அந்த எண்ணம் மட்டும் என்ன விட்டு போகல.. திடிர்னு ஒரு நாள், ரெட் சிக்னல் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, எனக்கு பக்கத்துல வயத்துல குழந்தையோட ஒரு பொண்ணு வண்டில இருந்தாங்க..சின்ன வயசு.. அதுவும் தனியா இந்த மாதிரி நேரத்துல, நான் கூட கேட்டேன், எண்ண மேடம், இந்த நேரத்துல தனியா பார்த்து போங்க, என்று சொன்ன அடுத்த வினாடி, தர தர வென ரோட்ல அவங்க வண்டி இழுத்துட்டு போச்சு, rash driving பண்ணிக்கிட்டு ஒரு ரெண்டு, மூணு பைக் வேகமா போறப்போ, அவங்களோட துப்பட்டா அவங்க வண்டில மாட்டிகிட்டு இழுத்துட்டு போச்சு.. டக்குனு, என் பைக் கீழ போட்டுட்டு பின்னாடியே போறதுக்குள்ள... எல்லா முடிஞ்சுருச்சு..வண்டில அடிச்சவன் போய்ட்டான்..உதவிக்கு ஒருத்தன் வரல, எல்லாரும் பக்கத்துல வரவே பயந்தாங்க.. அந்த பொண்ண என் மடில போட்டுட்க்கிட்டு இங்க பாருங்க, உங்களக்கு ஒன்னும் இல்ல..ஓகே. ஓகே...உங்க பாப்பா நல்லா இருக்கு, கொஞ்ச நேரத்துல ஹாஸ்பிடல் போய்டலாம்..அப்படி சொல்ல சொல்ல, அவங்க pant வழியா, ரத்தமா போச்சு, அது அந்த குழந்தை, எண்ண பண்றது யோசிக்கறதுல, அவங்க செத்து போய்ட்டாங்க.. உனக்கு ஞாபகம் இருக்கா மீனா, சில மாசத்துக்கு முன்னாடி நீ கூட கேட்டியே, ஏன் ஒரு மாதிரி இருக்கேனு.. இது தான் காரணம்.. அந்த நாள், பைத்தியம் புடிச்ச மாதிரி, ரோட்ல தனியா அழுது கிட்டே வந்தேன்... அப்போ தான், ஏற்கனவே நான் அழுதுட்டு போற மாதிரி வந்த கனவு, அன்னிக்கு போட்ட அதே டிரஸ், அதே இடம், அதே டைம்.. இன்னும் சொல்ல போனா, அதே மாதிரி அழுதுகிட்டே போனேன்..
உடனே, என் friend ஹரிஷுக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர், அவங்க கிட்ட சொன்னே, அவங்க இது ஒரு instinct இல்லாட்டி REM (Rapid eye movement ) behavior disorder, சில பேருக்கு அவங்களுக்கு, நடக்க போற விஷயம், இல்ல எப்பவோ நடந்த விஷயம், அடிக்கடியோ, எப்போதாவது வரும்.. இது, ரொம்ப voilent கூட இருக்கும்.. யாரோ நம்மள தாக்கற மாதிரி, திடிர்னு கத்துவோம், தனியா நடக்க ஆரம்பிபோம், திடிர்னு பேசுவோம், ஆனா யாருமே இருக்க மாட்டாங்க..எல்லாமே நடக்கும்.. பொதுவா, இந்த மாதிரி அடிக்கடி கனவுல தோன்ற விஷயங்கள் கண்டிப்பா நடக்க வாய்ப்பு இருக்கு சொன்னாரு...எப்போ நடக்கும், தெரியாது..ஒருவேளைஅது நடக்கலாம், நடக்காமையும் போலாம்.. ஆனா, இது ஒரு எச்சரிக்கையா கூட இருக்கலாம்.. ஒரு வேலை, இடம் மாற்றம், நல்ல தூக்கம், முக்கியமா நம்பள டிஸ்டர்ப் பண்ணற மாதிரி யான பொருள் எதுவும் இருக்க கூடாது,
மீனாவுக்கும், அவள் அப்பாவிற்கும் இதற்கு எண்ண பதில் சொல்ல என்று தெரியாது, இது ஏன் இத்தனை நாளா சொல்லல..இல்ல மீனா, இது கனவுதான் நினைச்சுட்டு இருந்துட்டேன், ஆனா இப்போ ரொம்ப பயமா இருக்கு, அதா சொன்னேன். ஒரு நல்ல விஷயம், நடக்கறது முன்னாடியே உங்க கிட்டே சொல்லிட்டேன், இனிமே எந்த பிரச்னையும் இல்லை.. எண்ண நடக்க போறது தெரியும், எதனால அது நடக்க போதுன்னு தெரியும், முன்னாடியே அதை தடுத்துட்டா.. சரி, இப்ப எண்ண பண்றது.. எனக்கும் தெரில மீனா, அங்கிள் நீங்க ஏன் ஏதும் சொல்ல மாட்டேங்கிறீங்க..யோசிக்கிறேன்.. ஹ்ம்ம் பேசாம, நீங்க மூணு பேரும் என் கூட ஊருக்கு வந்துருங்க.. அப்பறமா பாத்துக்கலாம்..முதல இந்த வீட்டையும் காலி பண்ணுங்க... இவர்கள் பேசுவதை, பொறுமையாக ஒரு மூலையில் இருந்து diana பார்த்து கொண்டே இருந்தால்..
தீடிரென்று, டிங் டாங் டிங் டாங்.. நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க, நான் போய் கதவை திறக்கிறேன்.. எனக்கு பயமா இருக்குங்க..ஒஹ்..அதான், நானு, அப்பா ரெண்டு பேரும் இருக்கோம்ல..முதல தேஜுவை புடி. மறுபடியும் டிங் டாங் டிங் டாங்..கதவை திறந்த உடனே, அங்கே செக்யூரிட்டி சார், உங்க போன் லைன் கிடைக்கல, அதான் அம்மாவும், பாப்பாவும் அவங்க friend வீட்டுல இருக்காங்களா, நாளைக்கு காலைல வரேன் சொன்னாங்க...உங்கள போன் பண்ண சொன்னாங்க..
அடுத்த நொடி, உயிரே போய் விட்டது கார்த்திக்கிற்கு..திரும்பி பார்க்கவும் முடியவில்லை, முகம் முழுதும் நடுக்கம், பயம், வியர்வை..மூச்சு மட்டும் அஹஹாஹ் ஆஹாஹ்ஹா அஹஹாஹ், செக்யூரிட்டி செக்யூரிட்டி என்று சொல்ல, அவர் அங்கே இருந்தும் காது கேட்கவில்லை..வீடு கதவு தானாக மூடி கொண்டது..மெதுவாக திரும்பி பார்க்க, அங்கே கரண்ட் டக்கென்று கட்டாகி, லைட் blink ஆகி கொண்டு இருக்க, You're my Honeybunch Sugarplum ,Pumpy-umpy-umpkin ,You're my Sweetie Pie அந்த டால் பாடி கொண்டுயிருக்க, அந்த லைட் மினுமினுக்கும் வெளிச்சத்தில் Diana சிரித்துக்கொண்டு இருந்தால்..
டக்கென்று, படுக்கையில் இருந்து கார்த்திக், ஆஆஆஆஆஆஆ என்று கத்த, தேஜு அழுகிறாள், மீனா கிச்சனலிரிந்து ஓடி வந்து கதவை திறந்ததும்...என்னாச்சு ? கார்த்திக் அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டே இருந்தான்...
முற்றும்...
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
21 Jan 2023
ஒரு முகம்
அன்பான உறவு,அழகான நட்பு,ஆழமான சொந்தம்,இறுகும் அருகிலோர், சிரித்து பழகும் சிலர்,பார்த்தும், காணாது பலர்,அத்தனை, முக பிம்பங்களையும் கிழித்தெறி...
11 Jul 2020
மாற்றம் ஒன்றே மாறாதது......
மனிதர்கள், உண்மையிலே ஒரு அதிசய பிறவி.. சில வருஷத்துக்கு முன்னாடி, மக்களோட மனநிலை வேற,இப்போ வேற..மனிதனே, மிருகமாய் மாறிவிட்டாலும்..அதன் இரக்க...
13 Apr 2022
நானடி...
விழிகள் பறித்தாள்மௌனம் கொடுத்தாள்மொழிகள் மறந்தேன்இதழை சுழித்தாய் இதயம் தொலைத்தேன்..நானடி...காதலே காதலே அருகினில் வா...மேகத்தில் ஏன் ஒளி...