MY DEAR பொம்மை எது நிஜம்
By Admin - 11 Jul 2021 626 0
MY DEAR பொம்மை - எது நிஜம்
பயத்தில், உறைந்து போன கார்த்திக்..உள்ளே மெதுவாக அங்கிள் வெளில, வெளில என்று இழுக்க..அங்கே அவரும் இல்லை.. இருட்டில், கையை மட்டும் நீட்டி, தேடி கொண்டு இருக்க.. டிங் டாங் டிங் டாங், வீட்டின் கால்லிங் பெல், திறந்தவுடன், மீனா, அப்பா வாங்க வாங்க, செக்யூரிட்டி சொன்னாரு நீங்க வருவீங்கன்னு...ஆமாம்மா, வந்தேன், வீடு பூட்டி இருந்துச்சு..ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வரேன்..ஆமா, மாப்பிள்ளை எங்க கானும், பேத்தியும் எங்க.. வெளில போய்ட்டு வந்த கொஞ்ச நேரம் விளையாடிகிட்டு இருந்தாங்க..ரொம்ப நேரமா சத்தம் இல்ல, தூங்கறாங்க நினைக்கிறன்..கூப்படவா..வேணாம் வேணாம்...வரட்டும் பாத்துக்கலாம்..கொஞ்ச தண்ணி தாமா. இது அனைத்தும், கார்த்திக் cupboard உள்ளே இருந்து கேட்டு கொண்டு இருக்க.. ஒரு நொடி, உலகமே இருண்டது போல் ஆனது, அப்படியே, பின்னாடி கையை வைத்து மெதுவாக கீழே உட்கார்ந்து, கையை வாயில் இறுக வைத்து சத்தம் வராமல் கத்திக்கொண்டு இருக்க, ஆனால் அந்த சத்தம் மீனாகும், அப்பாவுக்கும் மட்டும் கேட்டுது...உடனே வேகமாக ஓடிவந்து டக்கென்று ரூம் கதவை திறக்க, அங்கே தேஜா அழுது கொண்டுயிருக்க, தனது போர்வையை விலகி, எந்திரக்க முழுதும் வேயர்வில் கார்த்திக், பெரு மூச்சு விட்டு கொண்டே...அஹஹாஹ் ஹ்ஹஹ்ஹா.. எதுவும் யோசிக்கவில்லை, வெறும் மூச்சு மட்டும் விட்டுக்கொண்டே, அந்த ரூமில் இருக்கும் cupboard இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருந்தான்..மீனாவின் அப்பாவோ, மாப்பிள்ளை என்னாச்சு, அம்மா கொஞ்சம் தண்ணி கொண்டுவா..
மீனாவும், என்னாச்சு என்று கேட்டு கொண்டே, ஓஹோ, என்னாச்சு தேஜு..அப்பா கத்தி எழுப்பி விட்டாரா..சரி சரி, ஒன்னும் இல்ல, ஒன்னும் இல்ல..சமாதானம் செய்து கொண்டே, கிச்சனலிருந்து தண்ணி கொண்டுவந்து நீட்ட, கார்திக்க்கோ, பெட்டை விட்டு நகரவில்லை.. கொஞ்சமும் இமைக்காமல், cupboard மட்டும் பார்த்து கொண்டே இருந்தான்..மீனாவின் அப்பாவோ, அங்க என்ன இருக்கு, எதுனா கனவா ? முதல தண்ணி குடிங்க என்று சொல்லிக்கொண்டே, மெதுவாக அந்த cupboard கிட்டே சென்று, அதை திறக்க முயற்சித்தும், முடியவில்லை, அப்பா இருங்க, அது பூட்டியிருக்கு, சாவி தரேன் என்று சொல்லி, வெளியில் diana பொம்மை அருகில் சாவி இருந்தது... அஹஹாஹ், இது எப்படி இங்க..அம்மா, சாவி என்னாச்சு..வரேன் அப்பா, வரேன் வரேன்.. இந்தாங்க.. மீனாவின் அப்பா, மெதுவாக, பூட்டின் ஓட்டையில் சாவியை விட்டு, கதவை திறந்தவுடன், கார்த்திக் பயத்தில் ஆஆஆஆ என்று கத்த, அந்த சத்தத்தின் பயத்தில் அவளும் ஒரு வினாடி பயந்து விட்டால், அவரும் ஒரு நொடி பயத்தோடு, இப்போ எதுக்கு கத்தறீங்க, நீங்க எந்திரிச்சி லேந்து சரியில்லை.. உள்ளே சென்றால், அங்க எதுவும் இல்லை..இருட்டாக இருந்தது.. எதுவும் பேசவில்லை ஒரு வினாடி. வீடே அமைதி.. பயத்தின் உச்சத்திற்கே சென்ற கார்த்திக், அந்த cupboard பூட்டி சாவியை எங்கேயாவது தூக்கி போடுங்க, அப்பறம் அந்த diana பொம்மையும்.. என்ன சொல்லறீங்க கார்த்திக் ? அம்மா, தேஜாவிடம் ஹால் உக்காச்சுட்டு விளையாடு கண்ணு..அம்மா வரேன் என்று சொல்லி ரூமுக்குள் வர..
கார்த்திக் உடனே, மீனா வை பார்த்து, நீ நிஜமா மீனாவா, இல்ல வேற யாரோவோ..இது யாரு உங்க அப்பா தான..இப்போ நான் இருக்கறது நிஜத்தலயா, கனவிலேயே சத்தியமா தெரில. என்ன உளர்றீங்க.. எதுனா பார்த்து பயந்துடீங்களா ? இல்ல எதுனா கனவா...இல்ல இல்ல.. ஆனா, ஆமா, ஆமா...எதுனா ஒன்னு சொல்லுங்க... எனக்கு தெரில மீனா.. ஆனா, ஏதோ தப்பா நடக்க போது..முதல, என்னாச்சு சொல்லுங்க, நடந்த எல்லாத்தையும் கார்த்திக் சொல்ல, ஒரு நிமிஷம், மீனாவும், அவள் அப்பாவும் உறைந்து போனார்கள்.. சிறு நொடிகள், பயத்தின் உச்சத்திற்கே சென்று, வார்த்தை வர வில்லை, கார்த்திக் குடிக்காமல் இருந்த தண்ணீரை எடுத்து கட கட வென எல்லா தண்ணீரையும் குடித்துவிட்டு, மீனாவின் அப்பா மெதுவாக, நீங்க வெளிய போய்ட்டு அந்த பொம்மையை தூக்கி போட்டதான பிரச்சனை.. போடலனா ஒன்னும் ஆயிருக்காது.. தெரிலயே அங்கிள்... அவர்கள், அதை பற்றி பேசி கொண்டு இருக்க...மீனா ஒரு நிமிஷம் எல்லாரும் அமைதியா இருங்க...என்னாச்சு..இருங்க.. கேக்குதா ? அஹாஹஹா...ஒரு வினாடி அனைவரும் பயந்து கொண்டே, மெதுவாக கதவை திறந்தவுடன்.. அங்கே..
You're my Honeybunch Sugarplum ,Pumpy-umpy-umpkin ,You're my Sweetie Pie அந்த டால் பாடி கொண்டுயிருக்க, அருகில் தேஜூவும் , diana வும்..
(தொடரும்)
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Jul 2020
மாற்றம் ஒன்றே மாறாதது......
மனிதர்கள், உண்மையிலே ஒரு அதிசய பிறவி.. சில வருஷத்துக்கு முன்னாடி, மக்களோட மனநிலை வேற,இப்போ வேற..மனிதனே, மிருகமாய் மாறிவிட்டாலும்..அதன் இரக்க...
06 Jul 2021
My Dear பொம்மை - இனிதான் ஆரம...
MY DEAR பொம்மை - தொடக்கம்My Dear "பொம்மை" - இனிதான் ஆரம்பம் டிங் டாங், டிங் டாங் என்று காலிங் பெல் கேட்டவுடன், மீனா ...
27 Jun 2020
கண்கள் நீயே......
கண்கள் நீயே,காதலும் நீயே,என் விழிகளில் வழியும் ஜீவனும் நீயே...உயிரும் நீயே,உறவும் நீயே,என் உதிரத்தில் கலந்தஉருவமும் நீயே...அடி..வாழ்கின்ற நொடியேஉ...