கண் திறந்தால்
By Admin - 11 Jul 2020 1047 0

இருண்டு கிடக்கும் வாழ்வில்
கண்களை மூடிக்கொண்டு,
சுற்றும் பதறுகளே...
சற்றே - கண் திறந்தால்
அதன் ஒளி தரும்
பல வண்ணம்
தனிமை யென்பது,
ஒடுக்கப்பட்ட சிந்தனையல்ல,
அது - வாழ்வின்
கலைக்கூடம்
நீ
எழுவதும்,
அழுவதும்,
ஒன்றாய் படைக்கப்படும்,
காவியம்
உன்னை - நீ அறிவது
கூட்டத்தில் அல்ல,
தனிமையில்
துன்பத்தை கண்டு
சோர்வடையவில்லை - அது
சோர்வடையும்வரை
ஓயப்போவதில்லை
உன்
போராட்டம்..
புதிதல்ல,
தொடக்கமல்ல,
முடிவுமல்ல..
ஒன்றாய் பின்னிப்படர்ந்த,
உறவுகள்
உதிரத்தில் கலந்த,
பல வண்ணங்கள்,
வாழ்வியல்
இதன்
வெற்றி,
கதை,
பாதை,
அனைத்தும் காவியமாய்,
அழகான காட்சியாய்,
அதை உணராமல்,
ஏனோ நிற்க நிர்கதியாய்,
காரணம் - அனைத்தும்
பிண்டம் முன்பே
Add Your Comments
Say Something
Comments
No comments.
See More Stories
11 Oct 2020
எங்கே, நான் தேடுவேன்...
நொடி நேரம் என்னை;காணா விடில்வாசலில் வாடிடும் உந்தன்அழகிய முகம் - இனிஎங்கே, அந்த பாசத்தைநான் தேடுவேன்...சிறு காய்ச்சல் வந்து நான் துடிக்க - என்&nb...
12 Jan 2025
சிறந்த கவிதைக்காக பரிசு...
கன்னிமரா நூலகத்தில், இலக்கியச்சோலை நடத்திய கவியரங்கில், சிறந்த கவிதைக்காக பரிசு வழங்கப்பட்டது...இலக்கியச்சோலை ஆசிரியர் அய்யா தமிழினியின், இலக்கிய நண்ப...
06 May 2024
வாழ்க்கை
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்,வறண்டால் போகிறார்கள்,இறந்தால் அழுகிறார்கள்,மறுநாள் மறக்கிறார்கள்,இடம் யிங்கே பெரியது,மனங்களோ சிறியது !!!-கல்யாணராமன் நாகராஜ...